கேகே பிர்லா குழுமத்திற்கு சொந்தமான பர்னிச்சர் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் போராட்டம்.

சுரேஷ்பாபு

UPDATED: Nov 17, 2024, 1:14:26 PM

திருவள்ளூர் மாவட்டம் 

திருவள்ளூர் அடுத்த காக்களூர் தொழிற் பேட்டையில் கேகே பிர்லா குடும்பத்திற்கு சொந்தமான ஆசியாவிலே மிக பெரிய இந்தியன் பர்னிச்சர் தொழிற்சாலை இயங்கி வருகிறது.

இந்த தொழிற்சாலையை 1998 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலையில் பணியாற்றி வந்த 73 நிரந்தர தொழிலாளர்களை பர்னிச்சர் விற்பனை ஆகவில்லை என கூறி நிர்வாகம் கடந்த மார்ச் மாதம் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளித்துள்ளது.

கேகே பிர்லா குழுமம் -

பின்னர் முழுமையாக அவர்களை நிர்வாகம் பணியில் இருந்து நிறுத்தி தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் 3.50 லட்சம் செட்டில்மெண்ட் தொகை அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் அதற்கு சம்மதம் தெரிவிக்காமல் தொழிலாளர்கள் மீண்டும் தங்களுக்கு பணி வழங்க வேண்டும் அல்லது செட்டில்மெண்ட் தொகையை உயர்த்தி வழங்க வேண்டுமென கூறி நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

தொழிலாளர்கள் போராட்டம்

நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் எந்தவித முன்னேற்றம் அடையாததால் சென்னை குறளகத்தில் தொழிலாளர் நல ஆணையத்தில்  நிர்வாகத்தின் மீது பணியிலிருந்து நிறுத்தப்பட்ட தொழிலாளர்கள் புகார் அளித்துள்ளனர்.

நிர்வாக தரப்பினருக்கும் தொழிலாளர்களுக்கும் முதல் இரண்டு கட்டமாக சென்னை குறளகத்தில் உள்ள தொழிலாளர் நல ஆணையத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என கூறப்படுகிறது.

Latest Thiruvallur News Today In Tamil 

அடுத்தடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் நிர்வாகம் தரப்பில் பங்கேற்காமல் புறக்கணிப்பு செய்துள்ளது.

இந்நிலையில் முழுமையாக பணியிலிருந்து நிறுத்தப்பட்ட தொழிலாளர்கள் 73 பேரும் இன்றைய தினம் காக்களூர் பகுதியில் உள்ள தொழிற்சாலை பகுதியில் நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் மீண்டும் பிர்லா குழுமம் சார்பில் இதே பகுதியில் பர்னிச்சர் தொழில் தவிர்த்து வேறொரு தொழில் தொடங்க முயற்சி மேற்கொண்டு வருவதாகவும்.

Breaking News Today In Tamil 

அதனால் 40- 50 வயதைக் கடந்த தங்களுக்கு பணி வழங்க மறுப்பதாகவும் திருமணம் ஆகும் வயதில் பிள்ளைகள் இருந்து வருவதால் வேறு எந்த தொழிற்சாலைகளும் தங்களை பணியில் சேர்த்துக்கொள்ள தொழிற்சாலை நிர்வாகம் மறுப்பதாகவும்.

அதனால் புதிதாக தொடங்க இருக்கும் தொழிற்சாலையில் தங்களை மீண்டும் பணியில் நிர்வாகம் அமர்த்த வேண்டும் என கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

நிர்வாகம் தங்களை புதிதாக தொடங்க உள்ள தொழிற்சாலையில் பணி அமர்த்த வில்லை என்றால் சென்னை முகப்பேரில் உள்ள அதன் அலுவலகத்தில் முன்பாக குடும்பத்துடன் அமர்ந்து பணி வழங்கும் வரை போராட்டம் மேற்கொள்ளவும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு காணப்பட்டது.

பேட்டி

1.கணபதி

தொழிலாளி

2. ஏகாம்பரம்

தொழிலாளி

 

VIDEOS

Recommended