- முகப்பு
- மாவட்டச் செய்தி
- கம்பம் அருகே ராணுவ வீரரின் உடல் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கம்பம் அருகே ராணுவ வீரரின் உடல் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ராஜா
UPDATED: Nov 17, 2024, 3:38:24 PM
தேனி மாவட்டம்
உத்ரகாண்ட் மாநிலம் ஜோசிமட் பகுதியில் 2009 பீல்ட் ஹாஸ்பிடலில் லெப்டினென்ட் கர்னலாக பணிபுரிபவர் சுகுமார் இவர் உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி ஆர். ஆர். ராணுவ மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் போது உயிரிழந்தார்.
இவரின் பூத உடல் விமானம் மூலம் சொந்த ஊரான தேனி மாவட்டம் சுருளிப்பட்டிக்கு கொண்டு வந்து ராணுவ மரியாதை செய்து இவரது பூத உடல் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
கண் தானம்
மேலும் இவர் 37. வருடங்களாக இராணுவத்தில் பணிபுரிவதாகவும் இவரது மனைவி ஏற்கனவே இறந்து விட்டராகவும் இவருக்கு விக்னேஷ் என்ற மகன் மட்டும் உள்ளதாகவும் இவர் இறந்த பின்பு இவரது கண், டெல்லி ஆர். ஆர். இராணுவ மருத்துவனையில் தானம் செய்யபட்டதாக இவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
மற்றும் அவர் உடலில் போர்த்திய தேசியக்கொடி மற்றும் அவர்களுடைய உடமைகள் இறந்த ராணுவ வீரரின் தாயாரிடமும் மகனிடமும் ஒப்படைக்கப்பட்டது மற்றும் சுருளிப்பட்டி சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர் மரியாதை செய்தனர் ஊர் பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.