• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தில் குறைந்த மின்னழுத்த‌ பிரச்சினை 1 மாதத்தில் சரி செய்யப்படுமா ?

இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தில் குறைந்த மின்னழுத்த‌ பிரச்சினை 1 மாதத்தில் சரி செய்யப்படுமா ?

கார்மேகம்

UPDATED: May 5, 2024, 12:56:30 PM

ராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சிமடம் பகுதியில் தொடர்ந்து குறைந்த மின்னழுத்த பிரச்சினை இருந்து வருவதால் வீடுகளில் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களான ஏ.சி. பிரிட்ஜ் வாஷிங் மெஷின் உள்ளிட்ட‌ பொருட்கள் அடிக்கடி பழுதாகின

இதனிடையே குறைந்த  மின்னழுத்த பிரச்சினையை சரி செய்யாத மின்வாரியத்தை கண்டித்தும் குறைந்த மின்னழுத்த பிரச்சினையை நிரந்தரமாக சரி செய்ய வலியுறுத்தியும் நாளை மறுநாள் செவ்வாய்க் கிழமை ) தங்கச்சிமடம் வர்த்தக சங்கம் மற்றும்  பொதுமக்கள் இணைந்து கடையடைப்பு உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் தங்கச்சிமடம் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் நேற்று மின்வாரிய அதிகாரிகள் சமாதான கூட்டம் நடந்தது இந்த கூட்டத்தில் தங்கச்சி மடம் ஊராட்சி மன்ற தலைவர் குயின் மேரி வர்த்தக சங்க செயலாளர் வல்லப கணேசன்,

பொருளாளர் முகைதீன் பக்கீர் உதவி மின் பொறியாளர் நித்யா மற்றும் சமூக ஆர்வலர்கள் சின்னத்தம்பி கோவிந்தராஜ் ரமேஸ் அலெக்ஸ் கார்ல் மார்க்ஸ் தன பாண்டியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட உதவி மின் பொறியாளர் நித்யா பேசும்போது தங்கச்சிமடம் பகுதியில் இருந்து வரும் குறைந்த மின்னழுத்த பிரச்சினையை 1 மாதத்திற்குள் நிரந்தரமாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதனால் போராட்டம் நடத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்

மின்வாரிய அதிகாரியின் உறுதி மொழியை ஏற்று தங்கச்சி மடத்தில் நாளை மறுநாள் செவ்வாய்க் கிழமை வர்த்தக சங்கமும் பொதுமக்களும் இணைந்து நடத்தவிருந்த கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டத்தையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர் 

இந்த தகவலை வர்த்தக சங்க செயலாளர் வல்லப கணேசன் தெரிவித்தார். 

 

  • 3

VIDEOS

Recommended