- முகப்பு
- மாவட்டச் செய்தி
- திருச்சி புதிய பேருந்து நிலைய பணிகள் 3 மாதத்தில் நிறைவடையும்
திருச்சி புதிய பேருந்து நிலைய பணிகள் 3 மாதத்தில் நிறைவடையும்
JK
UPDATED: Sep 22, 2024, 5:46:50 PM
திருச்சி மாவட்டம்
முத்தரசநல்லூர் பகுதியில் உள்ள காவிரி ஆற்று கரையில் தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சரு கே.என்.நேரு பனைவிதை நடுப் பணியை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மாநகராட்சி ஆணையர் சரவணன் நேயர் அன்பழகன் புலித்தவர்கள் பனை விதையை நாட்டி தண்ணீர் ஊற்றினர்.
இந்நிகழ்வில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கே.என்.நேரு
தொடர்ந்து செய்தியாளர் பேட்டியளித்த அமைச்சர் கே.என்.நேரு :
சேலத்தில் பணி ஆரம்பித்து தமிழக முழுவதும் பத்து லட்சம் பண விதைகள் விதைக்கப்பட உள்ளது.
மழைக்காலத்தை மேற்கொள்ளும் வகையில் அனைத்து நகராட்சிகளும், மாநகராட்சி பொறுத்தவரையிலும் எல்லாம் தயார் நிலை உள்ளது.
மழை எதிர்பார்த்து என்ன முன்னெடுப்பணி தேவையோ அனைத்தும் செய்யப்பட்டுள்ளது.
Breaking News Today In Tamil
தற்போது முதலமைச்சர் அனைத்து பணிகளும் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார் பணிகள் நடைபெற்று வருகிறது.
திருச்சி புதிய பேருந்து நிலைய பணிகள் 3மாதத்தில் நிறைவடையும். தற்போது மதிப்பீட்டை கடந்து 100 கோடி அதிகமா செலவிடப்பட்டுள்ளது. அதற்கான நிதி முதல்வர் இப்பொழுது கொடுத்துள்ளார் என தெரிவித்தார்.