• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • 50 ஆண்டு பட்டுப்போன புளிய மரத்தால் காத்திருக்கும் பேராபத்து  நெடுஞ்சாலைத்துறைக்கு கண்டனம் தெரிவிக்கும் மக்கள் 

50 ஆண்டு பட்டுப்போன புளிய மரத்தால் காத்திருக்கும் பேராபத்து  நெடுஞ்சாலைத்துறைக்கு கண்டனம் தெரிவிக்கும் மக்கள் 

சண்முகம்

UPDATED: Jul 16, 2024, 4:21:27 AM

கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கீரப்பாளையம்- சேத்தியாத்தோப்பு பரபரப்பான சாலையில் ஒரத்தூர் கிராமப் பகுதியில் சாலையோரம் 50 ஆண்டுக்கு மேற்பட்ட பழமையான புளியமரம் இருந்து வருகிறது. 

இந்த மரம் தற்போது பட்டு போய்விட்டதால் எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழுந்து விபத்து ஏற்படுத்தும் நிலையில் இருக்கிறது.

Latest Cuddalore News & Live Updates

இந்த சாலை அதிக போக்குவரத்து நிறைந்த சாலையாகவும், பள்ளி, கல்லூரி மாணவர்கள், இருசக்கர வாகனங்கள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் பகுதியாகவும் இருக்கிறது. 

இந்த பட்டுப்போன புளிய மரத்தை வெட்டி அகற்றக் கோரி நெடுஞ்சாலைத்துறை, மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட பலரிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை என இப்பகுதி மக்கள் வேதனை அடைந்து வருகின்றனர்.

Today News Cuddalore Tamilnadu

இதன் வழியாக கடக்கும் வாகனங்களும் பொதுமக்களும் எந்த நொடியில் என்ன நேர்மோ என்ற அச்சத்துடனே கடக்க வேண்டிய சூழல் இருந்து வருகிறது. 

இந்த சாலைகளில் கடந்த ஒரு மாதங்களில் பல மரங்கள் சாலையில் சாய்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. 

புளிய மரம்

அதனால் ஏதேனும் விபத்து ஏற்படும் முன் பட்டுப்போன மிகப்பெரிய புளிய மரத்தை வெட்டி அகற்ற வேண்டும் என தெரிவிக்கின்றனர். 

முக்கியமாக இந்த சாலை வழியாக நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கடந்து செல்கிறார்கள் என்பதுதான் வேதனையிலும் வேதனை என்கின்றனர் இப்பகுதி மக்கள்.

 

VIDEOS

Recommended