- முகப்பு
- மாவட்டச் செய்தி
- கும்பகோணம் அருகே திருவாய்ப்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு.
கும்பகோணம் அருகே திருவாய்ப்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு.
ரமேஷ்
UPDATED: Aug 21, 2024, 12:27:16 PM
கும்பகோணம்
அருகே திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் ஒன்றியத்தில் இன்று திருப்பனந்தாள் அரசு மருத்துவமனை பேரூராட்சி அலுவலகம் குப்பை கிடங்கு அணைக்கரை உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டார் தொடர்ந்து பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளும் கேட்டிருந்தார்.
நிகழ்ச்சியின் தொடக்கமாக திருவாய்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அரசு பள்ளி
அப்போது மாணவ மாணவிகளிடம் தங்கங்களா எப்படி இருக்கீங்க சாப்டீங்களா இன்னைக்கு ஆசிரியர் என்ன பாடம் எடுத்தார்கள். தற்போது நடந்து முடிந்த தேர்வில் மாணவ மாணவிகள் எவ்வளவு மதிப்பெண்கள் எடுத்தீர்கள் என்று கேட்டிருந்தார்.
தொடர்ந்து பள்ளியில் படிக்கும் ஐந்து மாணவ மாணவிகளுக்கு காய்ச்சல் உள்ளது என்று தெரிந்தவுடன் திருப்பனந்தாள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மருத்துவர் உடனே வரவழைத்து சிறப்பு மருத்துவ முகாம் நடத்தினார்.
Latest Kumbakonam News
தொடர்ந்து பள்ளியில் தலைமை ஆசிரியர்கள் குமார், மீனாட்சி ஆகியோர் தற்போது பள்ளியில் 320 மாணவர்கள் உள்ளனர். அவர்கள் அமர்ந்து படிக்க ஐந்து வகுப்பறைகள் மட்டும் உள்ளது. 12 ஆசிரியர்கள் மட்டும் உள்ளனர். பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஆசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
தொடர்ந்து உடனே நடவடிக்கை எடுக்கிறேன் என்று மாவட்ட ஆட்சியர் பங்குஜம் தெரிவித்தார். தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்கள் நேரத்திற்கு வருகிறார்களா.
மருத்துவ முகாம்
போதுமான மருந்து மாத்திரைகள் உள்ளதா வரும் நோய்களிடம் மருத்துவர்கள் அன்பாக நடந்து கொள்கிறார்களா என்றும் கேட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து திருப்பனந்தாள் பேரூராட்சி அலுவலகம் மற்றும் குப்பை கிடங்கில் ஆய்வு மேற்கொண்டார்.
இதில் கோட்டாட்சியர் பூர்ணிமா, வட்டாட்சியர் பாக்யராஜ், உதவி இயக்குனர் அப்துல் ரகுமான், மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.