கும்மிடிப்பூண்டி அருகே தண்ணீர் தேடி வழிமாறி  பலத்த காயங்களுடன் வந்த பெண் புள்ளிமான்.

L.குமார்

UPDATED: May 13, 2024, 3:22:12 AM

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த காயலார் மேடு கிராமத்தில் சுதாராமு என்பவரின் வீட்டின் அருகே புள்ளிமான் ஒன்று முன் வலது கால் உடைபட்ட நிலையில் உடலில் பல காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடப்பதாக அங்கிருந்தவர்கள் மாதப்பாக்கம் வனத்துறை அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் வன காவலர் சதீஷ் தலைமையில் வனத்துறையினர் சம்பா இடத்திற்கு விரைந்தனர். 

பின்னர் அங்கிருந்த புள்ளி மானை மீட்ட வனத்துறையினர் மாதர்பாக்கம் வனத்துறை அலுவலகத்தில் புள்ளிமானுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட புள்ளிமான் சுமார் மூன்று வயது மதிக்கத்தக்கது எனவும் பெண் புள்ளிமான் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

தொடர்ந்து சிகிச்சைக்குப் பின் நேமலூர் காப்புக்காட்டில் புள்ளிமான் பாதுகாப்பாக விடப்படும் எனவும் வன காவலர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

 

VIDEOS

RELATED NEWS

Recommended