கும்பகோணம் அருகே 14 ஐம்பொன்னால் ஆன சுவாமி சிலைகள் கண்டெடுப்பு.

ரமேஷ்

UPDATED: Jun 14, 2024, 7:22:58 PM

கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுக்கா கோவில் தேவராயன் பேட்டை கிராமத்தில் மச்சபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது .

இந்த ஆலயத்திற்கு அருகில் முகமது பைசல் என்பவர் வீடு கட்டும் பணிக்காக பள்ளம் தோண்டும் போது இன்று காலை முதலில் ஒரு ஐம்பொன் சிலை கிடைத்தது.

அதனை தொடர்ந்து மேலும் பள்ளம் தோண்டும் போது அடுத்தடுத்து சுவாமி சிலைகள் கிடைத்தது. அருகில் இருந்த கிராமவாசிகள் பாபநாசம் வட்டாட்சியருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வட்டாட்சியர் அந்தப் பகுதிகளை முழுவதும் தோண்ட உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து அந்த பள்ளம் புல்டோசர் உதவியோடு தோண்டப்பட்டது.

அப்போது 14 சுவாமி சிலைகள் கிடைத்தது. மேலும் பூஜை பொருட்களும் கிடைத்தன. இதில் சோமாஸ்கந்தர், திருஞானசம்பந்தர், சந்திரசேகரன் , திருநாவுக்கரசர், விநாயகர் உள்ளிட்ட 14 சுவாமி சிலைகளும் மற்றும் பூஜைப் பொருட்களும் கிடைத்துள்ளன.

தகவல் பரவியதும் அக்கம்பக்கத்து கிராமத்தினர் கோவில் தேவராயன் பேட்டை கிராமத்தில் குவிந்ததால் பரபரப்பு நிலவியது.

14 சிலைகள் மற்றும் பூஜை பொருட்களை பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டது.

 

VIDEOS

RELATED NEWS

Recommended