- முகப்பு
- மாவட்டச் செய்தி
- கும்மிடிப்பூண்டியில் மூன்று மாதமாக மூடப்பட்டிருக்கும் ஆர் ஓ வாட்டர் பிளாண்ட் குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதி.
கும்மிடிப்பூண்டியில் மூன்று மாதமாக மூடப்பட்டிருக்கும் ஆர் ஓ வாட்டர் பிளாண்ட் குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதி.
L.குமார்
UPDATED: Oct 9, 2024, 2:01:34 PM
திருவள்ளூர் மாவட்டம்
கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் பேரூராட்சி சார்பில் 2019 ஆம் ஆண்டு 6.6 லட்சம் மதிப்பீட்டில் நவீன சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் திறந்து வைத்தார் அன்று முதல் கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது .
தற்போது சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் மூன்று மாதங்களாக செயல்படவில்லை என்று கூறப்படுகிறது மேலும் நவீன சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் பூட்டு போட்டு எப்பொழுது மூடிய நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது மேலும் இதுகுறித்து பொதுமக்கள் கேட்டபோது .
சுத்திகரிப்பு நிலையம் பழுதாகிவிட்டது அது விரைவில் சரி செய்யப்படும் என்று கூறியதாகவும் மக்கள் தெரிவிக்கின்றார்கள் .
ஆனால் மூன்று மாதங்கள் ஆகியும் இன்று வரை சரி செய்யப்படாததால் பொதுமக்களுக்கு தூய்மையான குடிநீர் கிடைக்காமல் வெயிலில் அவதிப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர் .
இதுகுறித்து உடனடியாக கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.