இந்து சமய அறநிலையத்துறை சொந்தமான ரூ.1.50 கோடி மதிப்பிலான இடம் ஆக்கிரமிப்பு

செ.சீனிவாசன்

UPDATED: Jul 23, 2024, 6:48:16 PM

நாகப்பட்டினம் மாவட்டம்

கீழ்வேளூரில் அமைந்துள்ள யாதவ நாராயண பெருமாள் கோவிலின் உப கோவிலான பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் சுமார் 500 ஆண்டுகள் பழமையான கோவில் ஆகும் . 

இக்கோவில் மிகவும் சிதிலமடைந்த நிலையில் இருந்ததால் தற்போது திருப்பணி வேலைகள் செய்யும் பொருட்டு கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் இருந்து வந்தது.

Latest Nagai District News

இதையடுத்து இன்று இதனை அகற்றும் பணி நாகை உதவி ஆணையர் ராணி தனி வட்டாட்சியர் ஆலய நிலங்கள் அமுதா தலைமையில் நடைபெற்றது. 

அந்த இடத்தில் சில வருடங்களாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது மேலும் அந்த பகுதியில் இருந்த இரண்டு கட்டிடங்களுக்கு இலாகா முத்திரையிடப்பட்டது.

இந்து சமய அறநிலையத்துறை

ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு எல்லை கற்கள் நடப்பட்டது . 

ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட சொத்தின் மதிப்பு சுமார் 1.50 கோடி ஆகும். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

 

VIDEOS

Recommended