• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • 9 வருடங்களாக அரசுத் துறைக்கு கொடுத்த மனுக்களை மக்களுடன் முதல்வர் முகாமில் மாலையாக அணிந்து போராட்டம்.

9 வருடங்களாக அரசுத் துறைக்கு கொடுத்த மனுக்களை மக்களுடன் முதல்வர் முகாமில் மாலையாக அணிந்து போராட்டம்.

ரமேஷ்

UPDATED: Aug 19, 2024, 9:24:52 AM

கும்பகோணம்

அருகே திருவிடைமருதூர் தாலுக்கா நாச்சியார் கோவிலில் அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திட மக்களுடன் முதல்வர் என்ற சிறப்பு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் மக்கள் அடிக்கடி அணுகுகின்ற துறைகளான, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சித்துறை,நகராட்சி நிர்வாகத்துறை, ஆதி திராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர்- மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை,

Latest Kumbakonam News

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, கூட்டுறவு துறை, சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை, எரிசக்தித் துறை, மின்சாரத்துறை, காவல்துறை, உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இந்த முகாமில் சமூக ஆர்வலர் கோவிந்த வல்லவ பந்து கடந்த 9 வருடங்களாக நாச்சியார் கோவில் சுற்றியுள்ள 9 ஏரி மற்றும் குளங்களை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி தண்ணீர் திறக்க வேண்டும் என்று கடந்த ஒன்பது வருடங்களாக பல்வேறு துறைகளில் மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று

Breaking News 

9 வருடங்களாக கொடுத்த மனுக்களை மாலையாக மாட்டிக் கொண்டு தமிழக அரசே தமிழக அரசே அறிவில்லையா அறிவில்லையா ஏரி குளங்களை தூர் வார மாட்டாயா என்று முழக்கமிட்டபடி ஏரி குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி தண்ணீர் திறக்க வேண்டும் என்று திருவிடைமருதூர் ஒன்றிய பெருந்தலைவர் சுபா திருநாவுக்கரசுவிடம், மனுவை அளித்து நிகழ்ச்சி இடத்தில் அங்கபிரதேசம் செய்ததால் பரபரப்பு நிலவியது.

அங்கிருந்த காவல்துறையினர் கோவிந்த வல்லப பந்த் இழுத்துச் சென்றனர்.

 

VIDEOS

Recommended