தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர்  உண்ணாவிரதப் போராட்டம்

JK

UPDATED: Nov 12, 2024, 9:38:48 AM

திருச்சி 

தமிழ்நாடு சத்துண ஊழியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாவட்ட தலைவர் அமுதா தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

போராட்டத்தின் போது தேர்தல் வாக்குறுதிகள் அறிவித்தவாறு சத்துணவு ஊழியர்களை முழு நேர அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் சத்துணவு ஊழியர்கள் ஓய்வு பெறும் பொழுது ஓய்வு பெறும் நாளில் ஒட்டுமொத்த தொகையான ரூபாய் 5 லட்சம் வழங்க வேண்டும்

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் -

தமிழகத்தில் 63ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும் குடும்ப பாதுகாப்பு கூடிய ஓய்வூதியம் 9000 வழங்க வேண்டும், தகுதி வாய்ந்த சத்துணவு செமையா இருக்கு அமைப்பாளராக பதவி உயர்வும் சமையலர், உதவி சமையலறர்களுக்கு சமையலராக பதிவு உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாநிலத் துணைத் தலைவர் பெரியசாமி

தேர்தல் நேரத்தில் முதல்வர் அறிவித்த சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்கள் ஆக்குவோம், பணிக்கொடை, ஓய்வூதியம் வழங்குவோம், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்புவோம் என தெரிவித்தார்.

Breaking News Today In Tamil 

ஆனால் தேர்தல் காலத்தில் சொல்லப்பட்ட வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை.

இன்று நிதி வழங்காமல் நிதி போஜனம் என்ற நல் விருந்து திட்டத்தை நடத்த கூறியும், சிறுதானியம் கண்காட்சி நடத்த வேண்டும் என சொல்கின்றனர் நிதியை கொடுத்தால் பணிகளை செய்ய ஊழியர்கள் தயாராக இருக்கின்றனர், எனவே தமிழக முதல்வர் உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என தெரிவித்தார்.

 

VIDEOS

Recommended