- முகப்பு
- மாவட்டச் செய்தி
- தொண்டி - மதுரை இடையே ரெயில் பாதை அமைக்க கம்யூனிஸ்டு மாநாட்டில் தீர்மானம்.
தொண்டி - மதுரை இடையே ரெயில் பாதை அமைக்க கம்யூனிஸ்டு மாநாட்டில் தீர்மானம்.
கார்மேகம்
UPDATED: Nov 12, 2024, 9:53:00 AM
இராமநாதபுரம்
தொண்டி - மதுரை இடையே ரெயில் பாதை அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
( மாநாடு)
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 14- வது தாலுகா மாநாடு நடைபெற்றது மாநாட்டிற்கு தாலுகா குழு உறுப்பினர் சேதுராமு தலைமை தாங்கினார் மாநாட்டின்
தொடக்கமாக மறைந்த சங்கரய்யா. சீதாராம் யெச்சூரி போன்ற தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது அதை தொடர்ந்து மாநாட்டு கொடியை தாலுகா குழு உறுப்பினர் ரெத்தினம் ஏற்றி வைத்தார்
மாவட்ட செயலாளர் காசிநாத துறை மாநாட்டை தொடங்கிவைத்தார் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முத்துராமு. கருணாகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்
( ரெயில் பாதை)
மாநாட்டில் தொண்டி - மதுரை இடையே ரெயில் பாதை அமைக்க வேண்டும் திருவாடானை அரசு தாலுகா மருத்துவமனையில் டாக்டர் காலிப் பணியிடங்களை உடனனே நிரப்ப வேண்டும் ஓரியூர் - திருவாடானை இடையே நகரிகாத்தான் மணிமுத்தாறு தரைப்பாலத்தை உயர்மட்ட பாலமாக கட்டி தர வேண்டும்
திருவாடானை தாலுகாவில் உள்ள கண்மாய்கள் வரத்து கால்வாய்களை தூர்வாரவும் திருவாடானை தாலுகாவில் உள்ள அனைத்து கிராமங்களிலும் உள்ள கிராம சாலைகளை புதிய தார்ச்சாலைகளாக அமைத்து தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
Breaking News Today In Tamil
இதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் திருவாடானை தாலுகா செயலாளராக ஜெயகாந்தன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்
மேலும் சேதுராமு அருள் சாமி சந்தானம் செந்தில்குமார் உள்பட 11- பேர் கொண்ட தாலுகா குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.