• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • திண்டுக்கல் குமுளி தேசிய நெடுஞ்சாலை யான லோயர் கேம்பில் இருந்து அனுமந்தன்பட்டி வரை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி துவக்கம்.

திண்டுக்கல் குமுளி தேசிய நெடுஞ்சாலை யான லோயர் கேம்பில் இருந்து அனுமந்தன்பட்டி வரை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி துவக்கம்.

ராஜா

UPDATED: Nov 12, 2024, 11:17:55 AM

தேனி மாவட்டம் 

தேனி மாவட்டத்தில் குழுளியிலிருந்து தேனி திண்டுக்கல் போன்ற பகுதிகளுக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலைகளில் ஆக்கிரமிப்பு செய்து சிலர் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர் இதன் காரணமாக அவ்வப்போது தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது

மேலும் தற்போது தேனி மாவட்டத்தில் சாலை விரிவாக்க பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதால் லோயர் கேம்ப்யிலிருந்து அனுமந்தன்பட்டி வரை தற்போது முதற்கட்டமாக தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் அதிகாரிகள் இன்று முதல் துவங்கியுள்ளனர்.

ஆக்கிரமிப்பு

இதன் ஒரு பகுதியாக கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் பொக்லின் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது சாலையோரம் உள்ள தேநீர் கடைகள் இளநீர் கடைகள் பழக்கடைகள் போன்ற பல்வேறு கடைகள் இன்று அகற்றும் பணி நடைபெற்றது

மேலும் அதிகாரிகள் அகற்ற வருவதற்கு முன்பாகவே பொது மக்களும் அந்த கடைகளை தாங்களாகவே அகற்றுவதற்கு முன் வந்து அதற்கான பணிகளும் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Theni District News

தொடர்ந்து ஓரிரு நாட்களுக்குள் இந்த ஆக்கிரமிப்பு பணி முழுமை அடையும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதில் பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் ஈடுபட்டனர்.

 

VIDEOS

Recommended