• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • தலைக்காய சிகிச்சை பிரிவு அமைக்க கோரி ராமநாதபுரம் அரசு மருத்துவமனை முன்பு 30- ந்- தேதி ஆர்ப்பாட்டம் - ஒ.பன்னீர்செல்வம்

தலைக்காய சிகிச்சை பிரிவு அமைக்க கோரி ராமநாதபுரம் அரசு மருத்துவமனை முன்பு 30- ந்- தேதி ஆர்ப்பாட்டம் - ஒ.பன்னீர்செல்வம்

கார்மேகம்

UPDATED: Aug 27, 2024, 10:13:57 AM

இராமநாதபுரம்

முன்னால் முதல் அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது 

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பல வசதிகள் இருந்தாலும் தலைக் காயங்களுக்கான சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்படவில்லை

இதன்காரணமாக பரமக்குடி ராமநாதபுரம்  கீழக்கரை ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் விபத்துக்கள் ஏற்பட்டு பொதுமக்களுக்கு தலைக் காயம் ஏற்பட்டால் காயம் அடைந்தவர்களை 100- கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கோ அல்லது தனியார் மருத்துவமனைக்கோ அழைத்துச் செல்லக்கூடிய அவல நிலை நிலவுகிறது

ஒ.பன்னீர்செல்வம்

இதன் விளைவாக தலைக் காயம் அடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க இயலாத நிலையில் உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன 

எனவே ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனைத்து வசதிகளுடன் கூடிய தலைக்காய சிகிச்சை பிரிவை உடனடியாக அமைக்கவும் 24- மணி நேரமும் பணியாற்றும் வகையில் டாக்டர்கள் மற்றும் இதர பணியாளர்கள் நியமிக்கவும் கோரி தி.மு.க. அரசை வலியுறுத்தி வருகிற 30- ந்- தேதி காலை 10.30- மணியளவில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனை முன்பு தர்மர் எம்.பி. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இவ்வாறு அவர் கூறினார். 

 

VIDEOS

Recommended