ராஜபாளையம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மியவாக்கிகாடுகள் உருவாக்கம்!

அந்தோணி ராஜ்

UPDATED: Aug 23, 2024, 8:45:38 AM

விருதுநகர் மாவட்டம்

ராஜபாளையம் முடங்கியாறு சாலை மேற்கு தொடர்ச்சி அடிவாரம் பகுதியில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான 6 ஏக்கர் அரசு நிலம் உள்ளது.

இந்த நிலமானது எவ்வித பராமரிப்பும் இன்றி முட்புதர்கள் நிறைந்து காணப்பட்டு வந்தது

மியவாக்கி முறை

இந்த நிலையில் தமிழக அரசின் பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டம் முழுவதும் ஒரு கோடி மரங்கள் நடும் திட்டம் நடைபெற்று வரும் நிலையில்  ராஜபாளையம் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆறுமுகம் துணை கோட்ட பொறியாளர் முத்து முனி குமாரி ஆகியோர் முன்னிலையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தில் ஜப்பான் மியவாக்கி முறையில் சுமார் 2000 மரக்கன்றுகள் நடப்பட்டு அணி அடர்வனக்காடுகள் உருவாக்கும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் மூலம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படுவது மட்டுமின்றி பறவைகள் விலங்குகளுக்கு புதிய வாழ்விடம் அமையும் எனவும் இதன்மூலம் இயற்கை வளம் பாதுகாக்கப்படும் என நெடுஞ்சாலை துறை சார்பில் தெரிவித்துள்ளனர்.

 

VIDEOS

Recommended