- முகப்பு
- மாவட்டச் செய்தி
- மத்திய அரசின் விருதுக்கு தேர்வான புதுக்கோட்டை எஸ் பி வந்திதாபாண்டே.
மத்திய அரசின் விருதுக்கு தேர்வான புதுக்கோட்டை எஸ் பி வந்திதாபாண்டே.
JK
UPDATED: Nov 3, 2024, 1:17:13 PM
திருச்சி
"திரள்நிதி திருடர் கூட்டமும், அவர்களின் சாதி வெறி இணையதள கூலிப்படையும் உனது புகைப்படத்தை மார்ஃபிங் செய்து மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், நீயோ செயல்வீராங்கனை.
பெண் குழந்தைகளுக்கு எதிரான POSCO குற்றத்தில் துரித விசாரணையும் நடவடிக்கையும் எடுத்து UNION HOME MINISTER INVESTIGATION பதக்கத்தை வென்று சிங்கப்பெண் என்பதை நிரூபித்து விட்டாய். வாழ்த்துக்கள் சிங்கப் பெண்ணே!" என்பதாக, "மத்திய உள்துறை அமைச்சரின் திறன் பதக்கங்கள் - 2024" விருதுபட்டியலில் இடம் பெற்றிருக்கும் வந்திதா பாண்டேவை வாழ்த்தி அவரது கணவரும், திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருமான வருண்குமார் தனிப்பட்ட முறையில் தனது வாட்சப்பில் பதிவு செய்திருந்த தகவல் வைரலாகி இருக்கிறது.
நாடு முழுவதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் பணியாற்றும் 463 போலீசாருக்கு, 2024-ஆம் ஆண்டுக்கான "மத்திய உள்துறை அமைச்சரின் திறன் பதக்கங்கள்" அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
கடந்த 2018 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த பதக்கம், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் பட்டேலின் நினைவாக அவரது பிறந்ததினமான அக்டோபர்-31 அன்று விருது அறிவிப்பு வெளியிடப்படுகின்றன.
இந்த விருதுக்கு சிறப்பு நடவடிக்கை, புலனாய்வு, நுண்ணறிவு, தடய அறிவியல் ஆகிய நான்கு துறைகளில் சிறந்து விளங்கும் போலீஸ் அதிகாரிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள். குற்றங்களை விசாரிப்பதில் உயர் தரத்தை மேம்படுத்துவதையும், அத்தகைய சிறந்த விசாரணையை அங்கீகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டு, ஆண்டுதோறும் "மத்திய உள்துறை அமைச்சரின் திறன் பதக்கங்கள்" வழங்கப்படுகின்றன.
கடந்த ஆண்டு "Union Home Minister's Medal for Excellence in Investigation" என்ற பெயரில் வழங்கப்பட்டு வந்த இந்த பதக்கம், இந்த ஆண்டு முதல், "Kendriya Grihmantri Dakshata Padak" என்ற பெயரில் வழங்கப்படுகிறது.
இந்த பதக்கமானது கடந்த 2015 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் ஏ.எஸ்.பி.யாக வந்திதாபாண்டே பணியாற்றிய சமயத்தில்,
பெரியநரிக்கோட்டை அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியராக பணியாற்றும் முருகன் என்பவர் 6மாணவிகளை பாலியல் ரீதியில் துன்பப்படுத்தியதாக போஸ்கோ வழக்கில், சிறப்பாக புலனாய்வு செய்து நீதிமன்ற விசாரணைகள் நிறைவுற்று, கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல்-22 ஆம் தேதி குற்றவாளி முருகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் 69000 அபராதம் விதித்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சிறந்த முறையில் புலனாய்வு செய்து குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்ததற்காகவும், தண்டனை பெற்றுத் தந்திருப்பதோடு அல்லாமல், தாழ்த்தபட்ட பிரிவைச் சேர்ந்த சிறுமிகளுக்கு அரசின் இழப்பீட்டுத் தொகையையும் பெற்றுத் தந்திருக்கிறார்.
கூடவே, அப்பெண் பிள்ளைகள் தொடர்ந்து படிக்கவும் உறுதுணையாக இருந்திருப்பதோடு, தற்போது, இருவர் இளங்கலை சம் ஆண்டும், 2நர்சிங், ஒருவர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் மற்றொருவர் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறுவதற்கும் ஆதரவாக இருந்திருக்கிறார் என்பதற்க்காகவும் இந்த விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இவரது கணவரும், திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருமான வருண்குமாரின் வித்தியாசமான வாழ்த்து செய்தியால் மட்டுமல்ல, அவரது இயல்பிலேயே கடந்த காலங்களில் எஸ்.பி.வந்திதா பாண்டே கவனத்திற்குரிய பெண் காவல்துறை அதிகாரியாக பலரை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.
உத்திரபிரதேசம் அலகாபாத்தை பூர்வீகமாக கொண்ட வந்திதா பாண்டே, கடந்த 2020 இல் ஐ.பி.எஸ். தேர்ச்சி பெற்று தமிழக கேடரில் பணியில் சேர்ந்தவர். கடந்த 14 ஆண்டுகளில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். கணவர் வருண்குமார் போலவே காவல்துறையில் அதிரடி நடவடிக்கைக்கு பெயர் போனவர்.
அதே சிவகங்கை மாவட்டத்தில் உயர் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டு சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருந்த கனவான்கள் சிலரால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்ட சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றவர். அந்த வாக்குமூலத்திலிருந்து போலீஸ் அதிகாரிகள் சிலரின் பெயரை நீக்க வேண்டும் என்பதாக, பல்வேறு வகையான மிரட்டல்கள் மேலிடத்து சிபாரிசுகள் பெரிய மனிதர்களின் புத்திமதிகளையெல்லாம் கடந்து நீதிமன்றத்தில் துணிச்சலாக சமர்ப்பித்தவர்.
பின்னர், சிவகங்கையிலிருந்து கரூர் எஸ்.பி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டபோது, அமைச்சர் ஒருவரின் நேரடி பினாமியாக அறியப்பட்ட கரூர் அன்புநாதனின் வீட்டில், தேர்தல் பட்டுவாடாவுக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில், அவரது வீட்டில் ரெய்டு நடத்தி கோடிக்கணக்கான பணத்தை பறிமுதல் செய்தவர்.
இந்த துணிச்சலான நடவடிக்கைக்களின் காரணமாக, பழிவாங்கப்பட்ட வந்திதாபாண்டே அப்போதைய ஆட்சி காலம் முடியும் வரையில், டம்மியான பதவிகளில் பணியமர்த்தப்பட்டிருந்தார். ஆட்சி மாற்றத்திற்கு பிறகே, புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
உதயநிதி ஸ்டாலினின் நட்பு வட்டத்தில் இருப்பதன் காரணமாக இருவரும் பக்கத்து பக்கத்து மாவட்டத்துக்கு பணி பெற்று வந்துவிட்டார்கள் என சீமானே நேரடியாக குற்றம் சாட்டி பேசினார்.
திருச்சியில் எஸ்.பி.யாக பணியாற்றி இரண்டாண்டு காலத்தில், ஆற்றிய அதிரடிகளுக்காக பணிகளுக்காக, 2023-24 ஆம் ஆண்டிற்கான "அண்ணா பதக்கம்" எஸ்.பி.வருண்குமாருக்கு அறிவிக்கப்பட்டிருப்பது என்பது இதில் கூடுதல் செய்தி, ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை சார்ந்து நிற்பதால் அல்ல தன்னியல்பான, தனித்துவமான, துணிச்சலான செயல்பாடுகளின் பணித்திறனின் காரணமாகவே, களத்தில் சிறந்து விளங்குகிறோம் என்பதை இத்தம்பதியினரை தூற்றுவோருக்கு செய்தியாக சொல்லியிருக்கிறது, இந்த விருது அறிவிப்பு.