- முகப்பு
- மாவட்டச் செய்தி
- வல்லக்கோட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில், சிக்னல் கம்பம் மற்றும் விளக்குகள் கீழே விழுந்து 3 நாட்களாகியும் கண்டு கொள்ளாத ஒரகடம் காவல்துறை
வல்லக்கோட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில், சிக்னல் கம்பம் மற்றும் விளக்குகள் கீழே விழுந்து 3 நாட்களாகியும் கண்டு கொள்ளாத ஒரகடம் காவல்துறை
லட்சுமி காந்த்
UPDATED: Jul 24, 2024, 7:22:43 PM
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம்
பகுதியில் சிப்காட் மற்றும் ஏரமான தனியார் தொழிற்சாலைகள் அமைந்துள்ளது. நாள்தோறும் செங்கல்பட்டு, சிங்கபெருமாள் கோவில் ,ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் வழியாக ஆயிரக்கணக்கான கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் இந்த தேசிய நெடுஞ்சாலையை கடக்கின்றனர்.
அதிக தொழிற்சாலைகள் நிறைந்த இந்த பகுதியில் மாத்தூர் , வல்லக்கோட்டை, வல்லம் வடக்கால், போந்தூர் போன்ற பகுதிகளின் சந்திப்புகளில் வாகனங்கள் நின்று செல்ல பெரும்பாலான இடங்களில் தானியங்கி சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
Latest Kanchipuram District News
இந்நிலையில் மாத்தூர் பகுதியின் சந்திப்பில் அமைக்கப்பட்டிருந்த போக்குவரத்து சிக்னல் விளக்குகள் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு அடியுடன் பெயர்ந்து சாலையின் மையத்தில் விழுந்ததுள்ளது. நல்வாய்ப்பாக அப்போது வாகனங்கள் ஏதும் செல்லாததால் யாருக்கும் எந்த விதமான காயமோ உயிர் சேதமோ ஏற்படவில்லை.
இப்படிப்பட்ட நிலையில், சிக்னல் விளக்கு கம்பம் சரிந்து கீழே விழுந்துவிட்டபடியால் மாத்தூர் சந்திப்பில் வாகனங்கள் குறுக்கும் நெடுக்குமாக செல்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆறு வழி சாலையான இதில் அனைத்து வாகனங்களும் 100 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் அதிவேகமாக செல்லும்.
News
அதிலேயும் காலை பள்ளி நேரங்களிலும் தொழிற்சாலைகள் ஆரம்பிக்கும் போதும் இரவு நேரங்களிலும் விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
எனவே நெடுஞ்சாலைத்துறையினரோ, காவல் துறையினரோ, போக்குவரத்து துறையினரோ அல்லது துறை சார்ந்த அலுவலர்களோ புதிய சிக்னல் விளக்கு கம்பத்தை உடனே அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.