- முகப்பு
- மாவட்டச் செய்தி
- எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி கூட்டுறவு சர்க்கரை ஆலை தினக்கூலி தொழிலாளிகள் காத்திருப்பு போராட்டம்
எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி கூட்டுறவு சர்க்கரை ஆலை தினக்கூலி தொழிலாளிகள் காத்திருப்பு போராட்டம்
சண்முகம்
UPDATED: Sep 2, 2024, 6:45:06 PM
கடலூர் மாவட்டம்
சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தினக்கூலி தொழிலாளிகள் 100க்கு மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர் இதில் சிலர் பணி ஓய்வு பெற்றுள்ளனர்.
இவர்கள் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகின்றனர்.இந்நிலையில் இவர்களுக்கு தினமும் வேலை வழங்காமல் இவர்களை இரண்டாக பிரித்து பாதி பேருக்கு மாதத்தில் 15நாட்கள் வேலை வழங்கப்படுகிறது.
மற்ற பாதிபேருக்கு அதே மாதத்தில் அடுத்த 15நாட்கள் வேலை வழங்கப்படுகிறது. இது ஒரு மாதம் மட்டுமே என்று நிர்வாகத்தின் தரப்பில் கூறப்பட்டது.
Breaking News
ஆனால் இந்த பணி வழங்கும் நடைமுறை இரண்டாவது மாதமும் தொடர்ந்ததால் வேதனை அடைந்த தினக்கூலி தொழிலாளர்கள் இதனால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிப்படைவதாக கூறி தங்களுக்கு மாதத்தில் அனைத்து நாட்களும் பழைய முறையிலேயே வேலை வழங்க வேண்டும் என்று தெரிவித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் வெளியிலிருந்து சிபாரிசின் பேரில் வவுச்சர் பணியாளர்கள் என்ற பெயரில் வேலைக்கு வந்தவர்களுக்கு சம்பளம் குறைத்து மாதத்தில் அனைத்து நாட்களும் பணி வழங்குவதற்கு கண்டனமும் தெரிவித்து நூற்றுக்கு மேற்பட்டோர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Latest District News
தற்போது ஆலையின் நடப்பு ஆண்டு கரும்பு அரவை பருவம் துவங்க உள்ள நிலையில் தினக்கூலி தொழிலாளர்களின் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் இவர்கள் தங்களுக்கு பணி நிரந்தரமும் வழங்க வேண்டும் எனவும் கோரிக்க வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காத்திருப்பு போராட்டம்
பல மணி நேரமாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டும் அதிகாரிகள் பேச்சு வார்த்தைக்கு யாரும் வராததால் தொடர்ந்து காத்திருக்கும் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.
ஏற்கனவே சர்க்கரை ஆலைக்கு போதுமான கரும்புகள் கிடைப்பதில் பிரச்சனை இருந்து வரும் நிலையிலும் புதிய தொழில்நுட்பம் சரியாக செயலாற்றுவதில்லை என்பதால் தற்போது ஆலையின் அரவைப் பருவம் துவங்குமா என்பது பெரும் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.