• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • தரங்கம்பாடி உப்பனாற்றின் கரையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள் சுகாதார சீர்கேடு.பொதுமக்கள் மற்றும் குடியிருப்புவாசிகள் அவதி.

தரங்கம்பாடி உப்பனாற்றின் கரையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள் சுகாதார சீர்கேடு.பொதுமக்கள் மற்றும் குடியிருப்புவாசிகள் அவதி.

செந்தில் முருகன்

UPDATED: Apr 24, 2024, 8:22:09 PM

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட வட்டாட்சியர் அலுவலகம் செல்லும் சாலையோரம் உப்பனாற்றின் கரை பகுதியில் இரவு நேரங்களில் தனி நபர்கள் இறைச்சிக் கழிவுகளை மூட்டை மூட்டையாக கொட்டிச்செல்கின்றனர்.

இதனால் கடும் துர்நாற்றம் ஏற்பட்டு சுகாதார சீர்கோடு ஏற்பட்டுள்ளது. இந்த துர்நாற்றத்தை கடந்தே பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனை,காவல் நிலையம் என அத்திவசிய தேவைகளுக்கு சென்று வரும் அவலநிலை உள்ளது.

மேலும் இறைச்சி கழிவுகளை காகம் மற்றும் கழுகுகள் தூக்கி சென்று அருகேயுள்ள குடியிருப்பு பகுதிகளில் போடுவதால் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

வட்டாட்சியர் அலுவலசாலை மற்றும் குடியிருப்பு பகுதி என பிராதன பகுதி அருகே அற்றின் கரையிலேயே இறைச்சி கழிவுகளை தொடர்ந்து கொட்டி வரும் தனி நபர்களை கண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இனிவரும் நாட்களில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

  • 1

VIDEOS

Recommended