• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • திருக்குறளில் பல உலக சாதனை படைத்த பட்டதாரி பெண் ஏழ்மை நிலையில் வாழும் இவர் தமிழக அரசு உதவி கறம் நீட்ட வேண்டும் எனக் கோரிக்கை.

திருக்குறளில் பல உலக சாதனை படைத்த பட்டதாரி பெண் ஏழ்மை நிலையில் வாழும் இவர் தமிழக அரசு உதவி கறம் நீட்ட வேண்டும் எனக் கோரிக்கை.

L.குமார்

UPDATED: May 25, 2024, 8:58:36 AM

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்பு குளம், செங்கல் சூளைமேட்டைச் சேர்ந்தவர் திலகவதி பாஸ்கர்.

பல்வேறு உலக சாதனைகளுக்கு சொந்தக்காரரான இவர் கடந்த 2023 ஆம் ஆண்டை நினைவு கூறும் வகையில் திலகவதி பாஸ்கர் என்ற தலைப்பில் 2023 வரிகளில் கவிதை எழுதி சாதனை படைத்து ஆல் இந்திய புக் ஆஃப் ரெகார்ட், சேவே வேர்ல்ட் ரெகார்ட் ஆகிய உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்தார்.

சிறந்த எழுத்தாளரும், பெண் சாதனையாளருமான திலகவதி பாஸ்கர் இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தி திருவள்ளுவர் தினத்தன்று ஒரு பட்டாணியில் ஒரு திருக்குறள் என 1330 பட்டாணியில் 1330 திருக்குறளை 10 மணி நேரம் 5 நிமிடங்களில் எழுதி புதிய சாதனை படைத்தார்

இவரது சாதனையை ஆல் இந்திய புக் ஆஃப் ரெகார்ட், சேவே வேர்ல்டு ரெக்கார்டு ஆகிய இரண்டு உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.

இவர் 50 தலைப்புகளில் 50 கவிதை, 500-க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 10- க்கும் மேற்பட்ட தொகுப்பு நூல்கள் என பல்வேறு சாதனை படைப்புகளை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இது எப்படியோ தனது குடும்ப கஷ்டத்தில் வாழும் இவருக்கு தமிழ் மீது தீராத காதல் கொண்டவர் பல சாதனைகளையும் புரிய வேண்டும் தமிழக விருதுகள் வாங்கியதற்கு இடமில்லாமல் தனது வீட்டில் உள்ள பீரோக்களின் வைத்துள்ளார் தமிழக அரசு உதவிக்கரம் நீட்டுமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

 

VIDEOS

Recommended