- முகப்பு
- மாவட்டச் செய்தி
- முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டு புதிய அணை கட்ட திட்டமிடும் கேரளா அரசை கண்டித்து விவசாய சங்கத்தினர் முற்றுகை போராட்டம்
முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டு புதிய அணை கட்ட திட்டமிடும் கேரளா அரசை கண்டித்து விவசாய சங்கத்தினர் முற்றுகை போராட்டம்
ராஜா
UPDATED: May 27, 2024, 2:50:56 PM
District News
தேனி மாவட்டம் லோயர் கேம்ப் முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட அனுமதி கேட்டு கேரளா அரசு கடந்த ஜனவரியில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் மனு அதில் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டு 128 ஆண்டுகள் ஆகிவிட்டதால் அணைக்கு கீழ் பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள், வன விலங்குகளின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது.
Theni District News
எனவே தற்போதுள்ள அணைக்கு 1200 அடிக்கு கீழே புதிய அணை கட்டிய பின் பழைய அணையை இடிக்க அனுமதிக்க வேண்டும் புதிய அணை கட்டும் போது கட்டி முடிக்கப்பட்ட பின்னும் தமிழகத்திற்கான தண்ணீர் பகிர்வு தற்போதைய ஏற்பாட்டின் படி தடையின்றி தொடரும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை ஆய்வு செய்த மத்திய அரசு அதை நிபுணர் மதிப்பீட்டுக் குழுவுக்கு மே 14 அனுப்பியது. மத்திய அரசின் நிபுணர் மதிப்பீட்டுக் குழு மே 28 ல் இது தொடர்பான கூட்டத்தை நடத்த உள்ளது.
கேரளாவின் இந்த செயல் தமிழக விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது எனவே கேரளாவை கண்டித்து இன்று குமுளியில் பெரியார் வைகை பாசன விவசாய சங்க உசிலம்பட்டி 58 ஆம் கால்வாய் சங்கம், அன்வர் பாலசிங்கம் அவர்களுடைய தலைமையில், மற்றும் காட்சிகண்ணன் முன்னிலையில்
Today District News
லோயர் கேம்ப் பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக வந்த விவசாயிகளை பென்னிகுயிக் மணி மண்டபம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தி குமுளிக்கு செல்ல விடாமல் அங்கேயே போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்தப் போராட்டத்திற்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.