பொது கிணற்றின் மேல் தூங்கிக் கொண்டிருந்த வாலிபர் சடலமாக மீட்பு.

பரணி

UPDATED: May 16, 2024, 11:30:35 AM

இராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த புத்தூர் கிராமம் பஜனை கோயில் தெருவை சேர்ந்த ராஜா மகன் கோகுல் வயது (30), கூலி வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் கலவை புத்தூர் கிராமத்தில் உள்ள பொது கிணற்றில் மேல் கரையில் அமர்ந்து இரவு தூங்கி உள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து, கலவை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கயிறை கட்டிக் கொண்டு கிணற்றில் இறங்கி நீரில் மூழ்கிய கோகுலை சடலமாக மீட்டனர். 

இச்சம்பவம் குறித்து, கலவை காவல் நிலையத்தில் கோகுல் உறவினர் பூங்கொடி 48, கலவை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரை பெற்றுக் கண்ட சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன்,சடலத்தை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு பிரோதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

VIDEOS

Recommended