நாகப்பட்டினம் நகராட்சியை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்.

செ.சீனிவாசன் 

UPDATED: May 28, 2024, 10:33:23 AM

District News 

நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளுக்கும் திருவாரூர் மாவட்டம் ஓடாச்சேரியில் இருந்து போர்வெல் அமைத்து அங்கிருந்து குடிதண்ணீர் குழாய் மூலம் கொண்டுவரப்பட்டு நாகை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள குடிநீர் தேக்க தொட்டியில் தேக்கி நகராட்சி முழுவதும் விநியோகம் செய்யப்பட்ட வருகிறது

இந்த நிலையில் நகராட்சி பகுதிகளில் விநியோகம் செய்யப்படும் குடிநீர் குறிப்பாக 27 & 28 வது வார்டுகளில் ஒரு மாதமாக குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக பொதுமக்கள் தொடர்ச்சியாக நகராட்சி நிர்வாக இலவச உதவி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளனர்

Tamilnadu District news

அதிகாரிகள் தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வந்ததாக கூறப்படுகிறது இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நாகை - திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாத நிலையில் கடந்த ஒரு மாதமாக குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருகிறது இதை எவ்வாறு குடிப்பது ஒரு மாதமாக நகராட்சி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து வருகிறோம்.

Live District news

அவர்கள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனர் இதனை சரி செய்தால் மட்டுமே இங்கிருந்து செல்வதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகை நகராட்சி உதவி பொறியாளர் நமச்சிவாயம் பெண்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உடனடியாக சரி செய்து தருவதாக உறுதியளித்ததால் நாகை - திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் காலி குடங்கள் மற்றும் கழிவுநீர் கலந்த குடிநீருடன் அமர்ந்திருந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரத்திக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

VIDEOS

Recommended