• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு தொடர்ந்து செயல்பட வேண்டுமென அமைச்சர்கள் மா சுப்பிரமணியனை நேரில் சந்தித்து கோரிக்கை

நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு தொடர்ந்து செயல்பட வேண்டுமென அமைச்சர்கள் மா சுப்பிரமணியனை நேரில் சந்தித்து கோரிக்கை

செ.சீனிவாசன் 

UPDATED: May 23, 2024, 10:55:05 AM

நாகை நகரப் பகுதியில் இயங்கி வந்த மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கடந்த மாதம் ஒரத்தூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டது

இந்த நிலையில் நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவுடன் தொடர்ந்து செயல்பட வேண்டுமென பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்

இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை நாகப்பட்டினம் மாவட்ட பொறுப்பு அமைச்சரும் சட்டத்துறை அமைச்சர்ருமான ரகுபதி நாகை மாவட்ட திமுக செயலாளரும் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவருமான என்.கௌதமன்

நாகை நகர திமுக செயலாளரும் நகர மன்ற தலைவருமான இரா.மாரிமுத்து நாகை இந்திய வர்த்தக சங்க நிர்வாகிகள் நாகை மாவட்ட தாலுக்கா மீனவ சங்கங்கள் ஆகியோர் நாகை மருத்துவமனை தொடர்பாக நேரில் சந்தித்து நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவுடன் செயல்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

 

  • 2

VIDEOS

RELATED NEWS

Recommended