திட்டக்குடியில் வீட்டில் அழுகிய நிலையில் வாலிபர் மரணம் போலீஸார் விசாரணை.

மைக்கேல்

UPDATED: May 24, 2024, 9:00:59 AM

கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சிக்கு உட்பட்ட எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் கருப்புசாமி மகன் தீனதயாளன் (வயது 37) இவர் கடந்த 15- ஆண்டுகளுக்கு முன்பு அக்பர் மகள் ஹரிஜிராபி (வயது 33)  என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளது.

இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டு காலமாக தீனதயாளன் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திட்டக்குடியில் உள்ள எம்ஜிஆர் நகரில் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை சுமார் 7.30 மணி அளவில் இவர் வீட்டின் அருகில் உள்ள நபர்கள் இவர் வீட்டில் இருந்து புகை வருகிறது என்று திட்டக்குடி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்ததின் பேரில் அங்கு சென்று பார்க்கும் பொழுது தீனதயாளன் இறந்து அழுகிய நிலையில் வீட்டின் உள்ளே இறந்து கிடந்தார்.

இவர் அருகாமையில் டேபிள் ஃபேன் இருந்தது. இவருடைய தலை மற்றும் இவரது வலது கை ஃபேனில் பட்டு எரிந்து நிலையில் இருந்ததை திட்டக்குடி டி எஸ் பி மோகன் இறந்த தீனதயாளன் உடலை மீட்டு உடற் கூறு ஆய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து

தீனதயாளன் இறந்தது கொலையா இல்லை தற்கொலையா அல்லது விபத்தா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

  • 1

VIDEOS

RELATED NEWS

Recommended