- முகப்பு
- மாவட்டச் செய்தி
- கோத்தகிரி பகுதி திமுக ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணனின் சொகுசு காரில் கொண்டு வரப்பட்ட ரூபாய் 8,59,000 பணம் பறிமுதல்
கோத்தகிரி பகுதி திமுக ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணனின் சொகுசு காரில் கொண்டு வரப்பட்ட ரூபாய் 8,59,000 பணம் பறிமுதல்
அச்சுதன்
UPDATED: Apr 17, 2024, 1:20:16 PM
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் பல பகுதிகளில் வாகனங்களில் எடுத்துச் செல்லும் பணங்களை பறிமுதல் செய்து வந்த நிலையில்
பிரச்சார கடைசி நாளான இன்று கோத்தகிரி மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலை ஜக்கணரை சக்த்தா ஹட்டி பகுதியில் திமுக ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணனின் சொகுசு காரை திமுக இளைஞர் அணியை சேர்ந்த நவீன் ஓட்டி வந்தபோது தேர்தல் பறக்கும் படையினர் காரை சோதனை செய்தனர்
அப்போது வாகனத்தில் ரூபாய் 8 லட்சத்தி 59 ஆயிரம் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது
இதனைத் தொடர்ந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராஜலட்சுமி தலைமையிலான குழு பணத்தை பறிமுதல் செய்தனர்
தேர்தலுக்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில் பொது மக்களுக்கு வழங்க எடுத்து செல்லப்பட்ட பணமா என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.