காவல்துறையினரை கண்டித்து கோட்டையை நோக்கி முதல்வரை சந்திக்க ஊர்வலமாக செல்ல இருப்பதாக பேட்டி.

சுரேஷ் பாபு

UPDATED: Sep 9, 2024, 6:58:34 PM

திருவள்ளூர் மாவட்டம்

ஆந்திராவிலிருந்து முறையாக ஜிஎஸ்டி செலுத்தி டிப்பர் லாரிகள் மூலம் ஜெல்லி எம் சன்டு ஏற்றி வரும் டிப்பர் லாரிகளை தமிழக எல்லையாக பாதிரிவேடு ஆரம்பாக்கம் உள்ளிட்ட சோதனைச் சாவடிகள் காவல்துறையினர் தடுத்து நிறுத்துவதால் 200லாரி உரிமையாளர்கள் மற்றும் அதனை நம்பியுள்ள ஆயிரம் குடும்பத்தினர் வாழ்வாதாரம் பாதிப்பதாக கூறி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் செங்குன்றம் சுற்று வட்டார பகுதி டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் மனு அளித்த பின் மாநில டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் யுவராஜ் அளித்த பேட்டியில் 

ஆந்திராவில் இருந்து ஜிஎஸ்டி பில்லுடன் கொண்டு வரும் எம் சன்டு ஜல்லி மலைமண் உள்ளிட்டவைகளை திடீரென கும்மிடிப்பூண்டி பகுதியில் காவல் துறையினர் தடுத்து நிறுத்துவதாகவும் எதற்காக தடுக்கிறார்கள்.

இங்கிருந்து கேரளாவிற்கு தினமும் ஆயிரக்கணக்கான லோட் மண் செல்கிறது எந்த ஒரு ஜீவோவும் இல்லாமல் செல்கிறது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வழியாக 3000 லோடு எம்சாண்ட்  கனிம வளங்கள் கடத்தப்படுகிறது இதற்கும் எந்த ஜீவோவும் இல்லை கேரளா அரசு தமிழகத்தின் கனிம வளங்களை வரவேற்கிறது

எம் சாண்ட்

ஆனால் ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டுக்குள் எடுத்து வரப்படும் எம்சாண்ட் உள்ளிட்ட கனிம வளங்கள் சுற்றுச்சூழலை பாதிக்கிறதா அல்லது விவசாயிகள் பாதிக்கிறார்களா நீராதாரம் பாதிக்கப்படுகிறதா கும்மிடிப்பூண்டி ஆரம்பாக்கம் செங்குன்றம் பகுதிகளுக்கு கனிமங்கள் வேண்டும் போர்ட் டெவலப் ஆக வேண்டும் என்றால் மூன்று மாவட்டங்கள் தாண்டி திருவண்ணாமலைக்கு சென்று கொண்டு வரும் நிலை உள்ளது இதனால் அதனுடைய விலை அதிகரித்து வருகிறது

அருகில் இருக்கும் ஆந்திராவில் இருந்து கொண்டு வரும் கனிமத்தால் எந்த பாதிப்பும் இல்லை விலையும் குறைந்து காணப்படுகிறது இதை ஏன் திடீரென தடுக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுகிறது இதனால் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து சங்கத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து மனு அளித்துள்ளதாகவும் இதனால் திருவள்ளூர் மாவட்டத்தின் வளர்ச்சியை தடைபடுகிறது,

முதல்வர் வெளிநாடு சென்று முதலீடுகளை கொண்டு வர பாடுபட்டு வரும் நிலையில் பக்கத்து மாநிலத்தில் இருந்து கனிமங்களை கொண்டு வருவதற்கு தடுக்கப்படுகிறது வியப்பாக உள்ளது.

போராட்டம்

இங்கிருந்து செல்லும் கனிமங்களை தடுக்கிறீர்கள் என்றால் அங்கிருந்து வரும் கனிமங்களை தடுப்பது தானே நியாயம் கேரளா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு எந்த உத்தரவு இல்லாமல் கனிமங்களை எடுத்துச் செல்லும் போது ஏன் அங்கிருந்து வரும் கனிமங்களை தடுக்கிறார்கள் நாங்கள் பணம் கொடுத்து ஜிஎஸ்டி பில்லுடன் வாங்கி வரும் கனிமங்களுக்கு அதிக லோடு திருட்டு என வழக்கு பதிவு செய்கிறார்கள்.

13 வருடங்களுக்கு மேலாக நடைமுறையில் உள்ளதை ஏன் திடீரென தடை செய்கிறார்கள் பழைய நடை முறையிலேயே இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. மனு அளித்த பிறகும் இதே நிலை நீடித்தால் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட வேண்டும்

20ஆம் தேதி மணலுக்காக கோட்டை நோக்கி முதல்வரை சந்திக்க ஊர்வலம் செல்ல இருப்பதாகவும் அதனுடன் சேர்ந்து இந்த கோரிக்கையும் வைத்து போராட உள்ளதாகவும் மழைக்கு முன்பு இரண்டடி மூன்றடி வீடுகள் கட்டி வந்த நிலையில் தற்போது ஐந்து அடிக்கு மேல் உயரம் ஏற்றி கட்டப்பட்டு வருகிறது அதற்கு மூலப்பொருட்கள் பில்டிங் கட்டுவதற்கான மணலை அரசு ஏழு மாதமாக வழங்கவில்லை

Latest Thiruvallur District News 

பாதிரிவேடு ஆரம்பாக்கம் உள்ளிட்ட இரண்டு சோதனைச் சாவடிகளில் மட்டுமே வாகனங்களை மடக்குவதாகவும் ஊத்துக்கோட்டை பொன் பாடி உள்ளிட்ட செக் போஸ்ட்களில் மடக்குவதில்லை எனவும் காவல்துறையினர் ஒரு தலை பட்சமாக செயல்படுவதாகவும் இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு 200 லாரி உரிமையாளர்கள் மற்றும் அதனை நம்பி உள்ள ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்படுவதாகவும் வாழ்வாதாரம் இழக்கும் நிலைக்கு தள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.

பேட்டி :1. யுவராஜ் ( மாநில டிப்பர் லாரி சங்கத் தலைவர் )

 

VIDEOS

Recommended