தேசியக்கொடியுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

ரமேஷ்

UPDATED: Aug 19, 2024, 11:33:01 AM

கும்பகோணம்

மேட்டூர் அணையில் இருந்து காவிரி நீரை திறந்துவைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக மழை இல்லாததால் அனைத்து வாய்க்கால்கள், ஏரிகள், குளங்கள் வறண்டு கிடக்கின்றன.

கடந்த 10 நாட்களாக காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடிய நிலையிலும் அனைத்து ஏரி, குளங்களில் உள்ள நீர்நிலைகளிலும் ஆக்கிரமிப்புகள் பல ஆண்டுகளாக அகற்றப்படவில்லை. வாய்க்கால்கள் முறையாக பராமரிப்பு செய்யப்படாததால் தூர்ந்து கிடக்கின்றன.

District News & Updates in Tamil

இந்நிலையில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் காவிரியில் தண்ணீர் கரை புரண்டு ஓடிய போதிலும் காவிரி கரையில் கும்பகோணத்தில் உள்ள 44 குளங்களில் நீர் நிரப்பப்படாததை கண்டித்து குடங்களில் தண்ணீர் கொண்டு வந்து ஆயிக்குளத்தில் ஊற்றி தண்ணீர் இன்றி காணப்படும் குளத்தின் நடுவே நின்று தேசியக்கொடியுடன் விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

VIDEOS

Recommended