• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • ஆற்காடு அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மின்சாரம் திருட்டு மின்சார துறையினர் அபராதம்.

ஆற்காடு அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மின்சாரம் திருட்டு மின்சார துறையினர் அபராதம்.

பரணி

UPDATED: May 5, 2024, 7:44:50 PM

இராணிப்பேட்டை மாவட்டத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல் மூட்டைகளை அந்தந்த பகுதிகளில் நேரடியாக கொள்முதல் செய்வதற்கு அரசு சார்பில் ஆங்காங்கே நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நெல் மூட்டைகளை வாங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு ஒன்றியத்திற்குட்பட்ட கரிக்கந்தாங்கல் கிராமத்தில் திமுக நிர்வாகிகள் மூலம் செயல்பட்டு வந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அங்கிருந்த மின்சார கம்பத்தில் திருட்டுத்தனமாக கடந்த ஒரு மாத காலமாக மின்சாரம் திருடப்பட்டு நெல் தூற்றும் மிஷினை பயன் படுத்தி வந்துள்ளனர்.

இதனை அறிந்த கே.வேளூர் உதவி பொறியாளர் சுஜாதா தலைமையிலான மின்சார துறையினர் நேரில் வந்து விசாரணை மேற் கொண்டு திருட்டுத்தனமாக எடுக்கப்பட்ட மின்சார இணைப்பினை துண்டிக்கப்பட்டதோடு அபராதம் விதித்தனர்.

தற்பொழுது கோடைகாலம் என்பதால் மின்சார தேவைகள் அதிகம் தேவைப்படுகிற இந்த சூழலில் அரசு சார்பில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல்நிலையத்தில் திருட்டுத்தனமாக மின்சாரம் திருடி பயன் படுத்திய சம்பவம் பொதுமக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

  • 2

VIDEOS

Recommended