- முகப்பு
- மாவட்டச் செய்தி
- பொருளாதார ரீதியாக 2047 ல் பாரத தேசம் வளர்ந்த தேசமாக மாறும்
பொருளாதார ரீதியாக 2047 ல் பாரத தேசம் வளர்ந்த தேசமாக மாறும்
அந்தோணி ராஜ்
UPDATED: Jul 31, 2024, 7:45:01 PM
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்
முடங்கியாறு சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் அறிவியல் பிரிவுக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
ரூபாய் 2.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த கட்டடத்தை நாகலாந்து ஆளுனர் இல. கணேசன் திறந்து வைத்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
நிகழ்ச்சியின் நிறைவில் இல.கணேசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
வயநாடு இயற்கை சீற்றம் வேதனைக்குரியது. முன் எச்சரிக்கையாக இருந்தாலும் திடீரென இது போன்ற துயர சம்பவங்கள் நிகழ்கிறது.
இல.கணேசன்
மத்திய அரசு உடனடியாக நிவாரணம் அறிவித்துள்ளது. நிவாரணம் என்பது தற்காலிகம் தான். மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து இறப்புக்கள் குறைவாக இருப்பதற்கான முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
வேதனைக்குரிய விஷயம். ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்பாராமல் இவ்வளவு பெரிய விபத்து நிகழ்ந்துள்ளது.
பாரத தேசம்
சாலையில் நாம் வாகனத்தை சரியாக இயக்கினாலும், எதிரில் வருபவர் சரியாக இயக்காவிட்டால் விபத்து ஏற்படும். இதை வைத்து பெரிதாக அரசியல் செய்யாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு முயற்சி செய்வோம்.
பொருளாதார ரீதியாக 2047 ல் பாரத தேசம் வளர்ந்த தேசமாக மாறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.