• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • கும்பகோணம் அருகே பந்தநல்லூரில் விவசாய சங்கங்கள் மற்றும் அனைத்து கட்சி சார்பில் மின் பற்றாக்குறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

கும்பகோணம் அருகே பந்தநல்லூரில் விவசாய சங்கங்கள் மற்றும் அனைத்து கட்சி சார்பில் மின் பற்றாக்குறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

ரமேஷ்

UPDATED: May 6, 2024, 3:23:49 PM

Kumbakonam Thiruvidaimarudur District News 

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் ஒன்றியம் பந்தநல்லூர் பகுதியில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக விவசாய மின் மோட்டார்கள் சரிவர இயங்காமல் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.

காலநிலை மாற்றத்தினால் வெப்ப அலை வீசும் காரணத்தினால் குழந்தைகள், வயோதீகர்கள், கர்ப்பிணி பெண்கள், கால்நடைகள் உடல் நலம் பாதிக்கப்படும் பேராபத்து ஏற்படும் நிலை உள்ளது. 

Latest News on Thiruvidaimaruthur

ஆகவே விவசாயத்தை பாதுகாக்க, குடிநீர் பஞ்சத்தை தீர்க்க, விசிறிகள் இயங்க, கால்நடைகளை காப்பாற்ற வேண்டி, தொடர் முனை மின்சாரம் வேண்டி, பந்தநல்லூரில் துணை மின் நிலையம் அமைக்க வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ்,

Today Kumbakonam District News 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு, இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், வணிகர் சங்கங்கள் அகில இந்திய முக்குலத்தோர் பாசறை மூவேந்தர் முன்னேற்ற கழகம் திருவள்ளூர் விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டு மின் பற்றாக்குறையை கண்டித்து,

பந்தநல்லூர் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் உழவர் பேரிக்க மாநில தலைவர் ஆலயமணி தலைமையில் கடைவீதி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Breaking Kumbakonam District News 

இதில் பாட்டாளி மக்கள் கட்சி மயிலாடுதுறை பாராளுமன்ற வேட்பாளர் ம.க ஸ்டாலின், விவசாய சங்க மாவட்ட தலைவர் சங்கர், பாட்டாளி மக்கள் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் ஜோதிராஜ், மாவட்ட துணை செயலாளர் திருஞானம் பிள்ளை, மண்டபம் கலியமூர்த்தி,

பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் சதீஷ்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் பாண்டியன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட பொறுப்பாளர் பொன் த மனோகரன், மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.

 

  • 2

VIDEOS

RELATED NEWS

Recommended