• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • அவசர கால ஹாரனை ஒலித்த படி, ஆந்திர மாநில அரசு வாகனம் என ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டும், போலி நம்பர் பிளேட்டை பயன்படுத்தி இயக்கப்பட்ட டூரிஸ்ட் வாகனம்

அவசர கால ஹாரனை ஒலித்த படி, ஆந்திர மாநில அரசு வாகனம் என ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டும், போலி நம்பர் பிளேட்டை பயன்படுத்தி இயக்கப்பட்ட டூரிஸ்ட் வாகனம்

ராஜ் குமார்

UPDATED: Sep 10, 2024, 11:57:26 AM

திருவள்ளூர்

தமிழக ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பொன் பாடி போக்குவரத்து சோதனை சாவடியில் இணைப் போக்குவரத்து ஆணையர் எம் கே சுரேஷ்குமார் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் மாதவன் ஆகியோரது உத்தரவின்படி, செய்யப்பட்ட வாகன சோதனையில்,

Latest Crime News In Tamil

காவல்துறையினர் பயன்படுத்தும் அவசரகால ஹாரனை ஒலித்த படி, ஆந்திர மாநில அரசு வாகனம் என ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டும், போலி நம்பர் பிளேட்டை பயன்படுத்தி இயக்கப்பட்ட, ஆந்திர மாநில டூரிஸ்ட் வாகனத்தினை, தடுத்து நிறுத்தி, ஆவணங்களை ஆய்வு செய்து பார்த்த போது, தமிழ்நாடு மாநில வரி செலுத்தாமல் இயக்கப்படுவது கண்டறியப்பட்டது. 

Breaking News In Tamil

பின்னர் வாகன உரிமையாளரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விசாரித்ததில், தமிழக அரசின் அனுமதி சீட்டு பெறாமல் இருப்பதற்கும், தமிழக அரசுக்கு வரி செலுத்தாமல் இருப்பதற்காகவும் இவ்வாறு இயக்கப்படுவது கண்டறியப்பட்டதன் அடிப்படையில் , கோகுல கிருஷ்ணன் மோட்டார் வாகன ஆய்வாளர் அவர்கள், டூரிஸ்ட் வாகனத்தை பறிமுதல் செய்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் திருவள்ளூரில் ஒப்படைத்தார். 

Latest Thiruvallur District News

கடந்த ஆண்டு முதல், ஆந்திர மாநில அரசு வாகனங்கள் எனவும் காவல்துறை வாகனம் எனவும் போலியாக நம்பர் பிளேட் வைத்து இயக்கப்பட்ட டூரிஸ்ட் வாகனங்களின் மீது, திருத்தணி ஆர்டிஓ சோதனை சாவடி அலுவலர்கள் எடுத்த கடும் நடவடிக்கையின் விளைவாக, இவ்வாறு தமிழக அரசுக்கு வரி செலுத்தாமல் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

VIDEOS

Recommended