தேவேந்திர குல மக்கள் இயக்கம் தலைவர் உட்படஆதரவாளர்கள் 14பேர் கைது.

JK

UPDATED: Oct 18, 2024, 11:18:06 AM

திருச்சி மாவட்டம்

பெட்டவாய்த்தலை காவல் நிலைய சரகத்தில், கடந்த 15ம் தேதி இரவு உதவி ஆய்வானர் செந்தில்குமார் தலைமையில் 3காவலர்கள் இரவு ரோந்தில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, வெள்ளை நிற காரில் துப்பாக்கிகள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகளுடன் சிலர் கரூர் திருச்சி சாலையில் வருவதாக பெட்டவாய்த்தலை உதவி ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பெட்டவாய்த்தலை சோதனை சாவடியில் வாகன சோதனை செய்தபோது அவ்வழியாக வந்த TN 28 BC 8283 என்ற பதிவெண் கொண்ட வெள்ளை நிற Maruti Suzuki Breeza காரை நிறுத்த முற்பட்ட போது காரை நிறுத்தாமல் வேகமாக சென்று அருகில் இருந்த போலீஸ் பேரிகார்டில் மோதி நின்றது.

உடனே உதவி ஆய்வாளரும், காவலர்களும் காரின் அருகே சென்ற போது. காரில் இருந்து வீச்சருவாளுடன் இறங்கிய நபர் காவல்துறையினரை பார்த்து தான் பெரிய ரவுடி என்றும். நான் தான் குமுளி ராஜ்குமார் என் காரையே நிறுத்துவிங்களா என்று கேட்டு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து காரில் தப்பி சென்றுள்ளார்.

மேற்படி, காரில் 5நபர்கள் இருந்ததால் ஜீயபுரம் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளரின் அறிவுறுத்தலின் பேரில் இரவு ரோந்து அதிகாரியான ராம்ஜிநகர் காவல் ஆய்வாளரும்.

பெட்டவாய்த்தலை உதவி ஆய்வாளரும் இணைந்து மேற்படி கொலை மிரட்டல் விடுத்த நபர்களை கைது செய்வதற்காக தொடர்ந்து கண்காணித்து சென்று 16ம் தேதி 3மணிக்கு பரமக்குடி, ஆதியேந்தல் கண்மாய்கரை அருகே காரில் இருந்த மேற்படி நபர்களான தேவேந்திர குல மக்கள் இயக்கத்தின் தலைவர்  தச்சநல்லூரில் குமுளி ராஜ்குமார் (45 ), 

தேவேந்திர குல மக்கள் இயக்கம்

கரூர் மாவட்டம், இனுங்கூர் குளித்தலை தாலுகாவை சேர்ந்த பாலு (எ) பாலசுப்ரமணியன் பின்னர், மேற்படி நபர்களை கைதுக்கான காரணம் கூறி கைது செய்து மேற்படி காருடன் பெட்டவாய்த்தலை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து காரை சோதனை செய்து பார்த்த போது அதில் நாட்டு துப்பாக்கிகள் -2, வீச்சரிவாள்-2,  சணல் லெடிகள்-25 ஆகியவை காரில் இருந்து கைப்பற்றப்பட்டு. வழக்கு பதிவு செய்யப்பட்டு, குமுளி ராஜ்குமார் மற்றும் இனுங்கூர் பாலு (எ) பாலசுப்பிரமணியன் ஆகியோரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.

மேலும், மேற்படி நபர்களுடன் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு தப்பி சென்ற மேலும் 3 நபர்களை தீவிரமாக தனிப்படையினர் தேடிவருகின்றனர்.

மேற்படி குமுளி ராஜ்குமார் என்பவர் மீது மாநிலம் முழுவதும் 5கொலை வழக்குகளும், 2கொலை முயற்சி வழக்குகளும், 2வழிப்பறி வழக்குகளும் என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. 

கொலை, கொலை முயற்சி கொள்ளை, வழிப்பறி, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்து குமுளி ராஜ்குமார், காவல் துறையின் நடவடிக்கையிலிருந்து தப்பிக்கும் நோக்கில் தேவேந்திர குல மக்கள் இயக்கம் என்னும் அரசியல் இயக்கத்தை ஆரம்பித்து, அதன் தலைவராகவும் பொறுப்பு வகித்துவருகிறார்.

மேற்படி குமுளி ராஜ்குமார். கடந்த 2021-ம் ஆண்டிலிருந்து தற்போது வரை காவல் துறை கைது நடவடிக்கையிலிருந்து தொடர்ச்சியாக தப்பித்து வந்துள்ளார்.

குமுளி ராஜ்குமாரின் கைதை தொடர்ந்து, திருச்சி மாவட்டத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த அவரது ஆதரவாளர்களான 1) அலெக்ஸ் த.பெ இளங்கோவன், மாகாளிகுடி. சமயபுரம். 2) அருண் த.பெ. வேல்முருகன், மாகாளிகுடி, சமயபுரம். 3) ராமு த.பெ ரமேஷ். மாகாளிகுடி, சமயபுரம், 4) லக்ஷ்மணன் த.பெ ரமேஷ். மாகாளிகுடி, சமயபுரம். 5) வெங்கடாசலபதி த.பெ நீலமேகம், வி.துறையூர், சமயபுரம், 6) கணேசன் (எ) கடலை கணேசன் த.பெ நீலமேகம், விதுறையூர், சமயபுரம்,

7) விநாயகமூர்த்தி த.பெ நீலமேகம். வி.துறையூர், சமயபுரம். 8) வள்ளி அருணன் த.பெ நீலமேகம். வி.துறையூர், சமயபுரம், 9) கார்த்திக் த.பெ துரைசாமி, மருதூர், சமயபுரம், ஆகியோர் மீது சமயபுரம் காவல் நிலையத்திலும், 10 சக்திவேல் த.பெ கண்ணன் அண்ணாநகர் காலனி, தொட்டியம், என்பவர் மீது பெட்டவாய்த்தலை காவல் நிலையத்திலும், 11) பொன்னடி த.பெ பாலசுப்பிரமணியன், எழுநூற்றுமங்கலம், குளித்தலை 12) சங்கீத்குமார் ஆகியோர் மீது முசிறி காவல் நிலையத்திலும். 13) கோபி த.பெ கணேசன், கீழத்தெரு. கோப்பு என்பவர் மீது சோமரசம்பேட்டை காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட குமுளிராஜ்குமார், பாலசுப்பிரமணியன் ஆகிய இருவரையும் திருச்சி ஸ்ரீரங்கம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

 

VIDEOS

Recommended