• முகப்பு
  • குற்றம்
  • கொழும்பு பல் வைத்தியசாலை அருகில் முச்சக்கர வண்டிக்குள் சடலம் மீட்பு

கொழும்பு பல் வைத்தியசாலை அருகில் முச்சக்கர வண்டிக்குள் சடலம் மீட்பு

எம்.நசார் - கொழும்பு செய்தியாளர்

UPDATED: Jul 23, 2024, 9:44:14 AM

இன்று காலை ஒரு மணியளவில், கொழும்பு - 07 குருந்துவத்தை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த 119 தகவலின் பேரில், இலங்கை தேசிய பல் வைத்தியசாலைக்கு அருகில் SG YV 7806 எனும் இலக்கத்துடன் உள்ள கறுப்பு முச்சக்கரவண்டியில் அடையாளம் தெரியாத ஒருவர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அந்த வாகனம் பற்றிய தகவலுக்காக மோட்டார் வாகன திணைக்களத்தை அணுகியதில், அது 28/01 கஜ்ஜுகஹவத்தை, லபுஹெங்கொட, மித்தெனியாவில் வசிக்கும் அசங்க கருணாதிலக்க எனும் நபரின் இருப்பிடமாக இருக்கும் என கண்டறியப்பட்டது.

பொலிஸார் 28/01 கஜ்ஜுகஹவத்தை, லபுஹெங்கொட, மித்தெனியாவை சென்று விசாரணை மேற்கொண்டபோது, ​​விதாரனகே அசங்க கருணாதிலக்க என்பவர் அங்கு வசிப்பவர் என்றும், அந்த முச்சக்கரவண்டியின் உரிமையாளர் அவரது மைத்துனர் வானதிவின்னகே சமிந்த குமார, வயது 33 என்பதும் தெரியவந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருதுவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 சம்பவ இடத்திற்கு கொழும்பு நீதவான் விவேகம் செய்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு போலி சாருக்கு உத்தர பிறப்பித்தார்.

 

VIDEOS

Recommended