திருச்சி ரயில் மேடையில் கஞ்சா பறிமுதல் - ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை.
JK
UPDATED: Oct 29, 2024, 9:15:48 AM
திருச்சி
திருச்சி இரயில்வே பாதுகாப்பு படையினர் ரயில் நிலையத்தில் இன்று காலை திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் செபாஸ்டியன் தலைமையில் குற்றம் தடுப்பு மற்றும் கண்டறிதல் குழு மற்றும் ரயில்வே அதிகாரி விஸ்வநாதன் ஆகியோர் இணைந்து திருச்சி ரயில் வளாகத்தில் சட்ட விரோத பொருட்கள் கடத்தல் மற்றும் சமூக விரோதிகளின் நடமாட்டம் போன்றவற்றுக்கு எதிராக சிறப்பு இயக்கத்தை நடத்திக் கொண்டிருந்தனர்.
கஞ்சா
அப்போது, திருச்சி ரயில் நிலையம் நடைமேடை 5ல் வந்தபோது சந்தேகத்திற்கிடமாக இருந்த துணி பண்டலை கைப்பற்றினர்.
அதைத் திறந்து பார்த்தபோது அதில் 1.200 கிலோ கஞ்சா இருப்பதை கண்டறிந்தனர். அதன் மதிப்பு ரூ.22,000/- எனக் கூறப்படுகிறது.
ரயில்வே பாதுகாப்பு படை
தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கும் வகையில் கஞ்சாவை ரயில்வே உயர் அதிகாரி விஸ்வநாதனிடம் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்ந்து துணியில் சுற்றி மறைத்து கஞ்சாவை கடத்தி வந்த நபர் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.