குளோரியஸ் ஜகோனிக் தேசிய விருது வழங்கும் நிகழ்வில் இந்திய திரை உலக நடிகை மீனா சாஹர் பங்கேற்பு
அஷ்ரப் ஏ சமத்
UPDATED: Sep 9, 2024, 10:06:36 AM
குளோரியஸ் ஜகோனிக் தேசிய விருது வழங்கும் 2024 வைபவம் ஞாயிற்றுக்கிழமை 08.09.2024 காலி முகத்திடல் ஹோட்டலில் இவ் அமைப்பின் ஏற்பாட்டாளர் கலாநிதி அல் ஹசீனா தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு இந்திய சிறந்த நடிகையின் மீனா சாஹர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சுமார் 200 பேர் க்கும் மேற்பட்டவர்களுக்கு விருதுகளை வழங்கி வைத்தார்.
இலங்கையில் இருந்து நாலா பாகங்களிலும் அழகுக் கலை, மற்றும் சிகை அலங்காரம், பாடகார்கள்,நடிகர்கள், ஊடகவியலாளர்கள், இத்துறை சார்ந்த போதனாசிரியர்கள், புகைப்படப்பிடிப்பாளர் கள், சமூக சேவை ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், தொலைக்காட்சித் தயாரிப்பாளர்கள், போன்றவர்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு விருதுகள், சான்றிதழ்,பதக்கங்களை வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன் இத்துறையில் தொடர்ச்சியாக சுய தொழில் முயற்சியில் சேவை ஈடுபட்டுவரும் அழகுக்கலை நிபுணர்கள் மற்றும் என்.வி.கி.யு அரச தொழிற் சான்றிதழ் பெற்றவர்களுக்கு மட்டும் இவ் விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் மனித உரிமைகள் அமைப்பின் பணிப்பாளர் அமிர்க்கான், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தானத்தின் ஆலோசகர் புரவலர் ஹாசிம் உமர். தினகரன் பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர், மற்றும் ஊடக நிறுவனங்களின் பிரநிதிகளும் பல்வேறு கம்பனிகளின் முகாமைத்துவ பணிப்பாளர்கள் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டனர்.
அதேவேளை ஏற்பாட்டாளர் அல் ஹசீனாவின் தயாரான ரஹ்மா ஷாஹுல் ஹமீட் அவர்கள் எழுதிய குறுநாவல் விடியத் துடிக்கும் இரவுகள் எனும் நூல் வெளியீட்டு வைக்கப்பட்டது
நூலின் முதல் பிரதியை புரவலர் ஹாசிம் உமர் இடம் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.