• முகப்பு
  • இலங்கை
  • மலையகம் இங்கிருந்து எங்கே?  - மாத்தளையில் நூல் வெளியீட்டு விழா   

மலையகம் இங்கிருந்து எங்கே?  - மாத்தளையில் நூல் வெளியீட்டு விழா   

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Aug 9, 2024, 8:23:38 AM

அறுபதுகளில எழுந்த சினம் கொண்ட பரம்பரையினர் என்று கல்விமான் இர.சிவலிங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட ஓய்வு நிலை கல்விப்பணிப்பாளர் பீ.மரியதாஸ் எழுதிய மலையகம் இங்கேயிருந்து எங்கே? வரலாற்று ஆய்வு நூலின் மற்றும் ஒரு வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 11 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) பேராசிரியர் துரை மனோகரன் தலைமையில் மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கல்யாண மண்டபத்தில் பிற்பகல் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

மாத்தளை சுவாமி விபுலானந்தர் கலாமன்றமும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடத்தும் முத் தமிழ் விழாவில் மலையகம் இங்கிருந்து எங்கே? என்ற நூலினை புத்தசாசன மத விவாகார மற்றும் கலாசார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க அவர்களின் முன்னிலையில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் வை.அநிருத்தனன் வெளியிட்டு வைக்கின்றார்.

கலைஒளி முத்தையாபிள்ளை அறக்கட் டளையின் சார்பில் எச் .எச் விக்கிரமசிங்க பதிப்பித்த இந்நூலின் பிரதிகளை மாத்தளை முத்துமாரியம்மன் ஆலய தலைவர் விக்னேஸ்வரா சர்வானந்தா, மாத்தளை காந்தி சபைத் தலைவர் சண்முகம் சந்திரசேகரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எஸ் சிவஞானம் ஸ்ரீதரன், லொற்றிகழகத்தின் உதவி ஆளுநர் ஆர். ஸ்ரீதரன், கே.பெசன் அதிபர், தேசபந்து எஸ்.கேசவன், விபுலானந்த கலாமன்ற செயலாளர் தியாகராஜா சத்தியசீலன் ஆகியோர் பெற்றுக்கொள்கின்றனர்.

இதன் மற்றொரு வெளியீட்டு விழா இம்மாதம் 18ம் திகதி பதிப்பாளர் ஒளிவண்ணன் தலைமையில் சென்னையில் இடம் பெறுகின்றது.

 

VIDEOS

Recommended