• முகப்பு
  • இலங்கை
  • வெலிகம ரிம்ஸா முஹம்மத், 'இலக்கியத் தென்றல்', 'லங்கா புத்திர', 'தேசபந்து' போன்ற பட்டங்களைப் பெற்றார்

வெலிகம ரிம்ஸா முஹம்மத், 'இலக்கியத் தென்றல்', 'லங்கா புத்திர', 'தேசபந்து' போன்ற பட்டங்களைப் பெற்றார்

ஐ. ஏ. காதிர் கான்

UPDATED: Sep 18, 2024, 1:55:10 AM

சர்வதேச மனித உரிமைகள் பேரவையும் சர்வதேச பெளத்த சம்மேளனமும் இணைந்து, 'தேசிய கலை அரண்' அமைப்பின் கீழ் 250 கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வு   கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

original/img-20240917-wa0133
வாழும் போதே வாழ்த்துவோம் என்ற கருப்பொருளில் நடந்த இந்த நிகழ்வில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தொழிற்சங்க சம்மேளனத்தின் பணிப்பாளர் சமன் ரத்னப்பிரிய பிரதம அதிதியாகப் பங்கேற்றார்.

இந்நிகழ்வில், வெலிகம ரிம்ஸா முஹம்மத் கலை இலக்கியத்தில் வழங்கிய பங்களிப்புகளுக்காக 'இலக்கியத் தென்றல்', 'லங்கா புத்திர', 'தேசபந்து' உள்ளிட்ட பட்டங்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

அவர் முன்பே 'சாமஸ்ரீ கலாபதி', 'சாதனைக்குரிய மகளிர்', 'காவியப் பிரதீப', 'கலாபிமானி', 'கலைமதி', 'கவித்தாரகை', 'கலைச்சுடர்' போன்ற பல விருதுகளால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.



 

VIDEOS

Recommended