• முகப்பு
  • இலங்கை
  • மலையக காணி உரிமை வழங்கும் திட்டத்தில் ஏற்பட்டுள்ள தடங்கல் பெருந்தோட்ட நிறுவனங்களால் ஏற்பட்டதே

மலையக காணி உரிமை வழங்கும் திட்டத்தில் ஏற்பட்டுள்ள தடங்கல் பெருந்தோட்ட நிறுவனங்களால் ஏற்பட்டதே

அமைச்சின் ஊடகப் பிரிவு

UPDATED: Jul 17, 2024, 1:45:20 PM

மலையக காணி உரிமை வழங்கும் திட்டத்தில் ஏற்பட்டுள்ள தடங்கல் பெருந்தோட்ட நிறுவனங்களால் ஏற்பட்டதே என்பதை அனைவரும் அறிந்திருப்பீர்கள்," என்று நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டார். 

அதிகம் பாராளுமன்ற பிரதிநிதிகள் மற்றும் பெருந்தோட்ட பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (17) முற்பகல் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் மலையக மக்களுக்கான காணி உரிமை மற்றும் லயன் அறைகளை கிராமமாக்குதல் போன்ற முக்கிய விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டது.

அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஊடகங்களுடன் பேசியபோது, "காணி உரிமை வழங்கும் திட்டத்தில் ஏற்பட்ட தடங்கல் பெருந்தோட்ட நிறுவனங்களால் ஏற்பட்டதே," என்று தெரிவித்தார்.

 மேலும், "இன்றைய கலந்துரையாடல் மிகச்சிறப்பாக நடைபெற்றது. அனைவரும் இதை வரவேற்று ஆதரவு தெரிவித்தனர். சில திருத்தங்கள் மற்றும் மாற்றங்கள் தேவைப்படுவதாகக் கூறினார்கள்," என்றார்.

ஜனாதிபதி அவர்களிடம் கருத்து தெரிவித்த போது, "சிலர் எங்களுக்கு எல்லைகளை கிராமங்களாக மாற்றினால் லயன் அறைகளுக்கு அங்கீகாரம் வழங்குவது போல் ஆகும் என்று சொல்கின்றனர்.

ஆனால், அது உண்மை இல்லை. இன்றைக்கு மலையக இளைஞர்கள் கொழும்பில் வேலை செய்கின்றனர், காணி உரிமை இல்லாத இடத்தில் வீட்டு உரிமை என்பது வேறு, காணி உரிமை என்பது வேறு. இதனை புரிந்துகொள்ள வேண்டும்," என்றார்.

"எங்கள் திட்டம் மக்களுக்கு சட்டத்தின் மூலம் காணி உரிமை வழங்குவதே ஆகும். கிராமங்களாக மாற்றினால் மட்டுமே மக்களுக்கு தேவையான அரசாங்க வரப்பிரசாதங்கள் கிடைக்கும். பெருந்தோட்ட கட்டுப்பாட்டுக்குள் இருந்தால், அரசாங்க உதவிகள் கிடைக்காமல் போகும்," என்றார்.

சிலர் இதை தேர்தல் கால அரசியலாக பார்க்கின்றனர். ஆனால், 30,000 மலசலக்கூடங்கள் தேவைப்படுகின்றன. காரணம் காணி உரிமை இல்லாதது. இந்திய அரசாங்கம் வடக்கு மற்றும் கிழக்கில் 28,000 வீடுகள் கட்டியுள்ளது.

அதே இந்திய அரசாங்கம் 4,000 வீடுகள் வழங்கியபோதும், மக்கள் காணி உரிமை இல்லாததால் வீடுகள் கட்ட முடியவில்லை," என்றார்.

 

VIDEOS

Recommended