ரஷ்யாவில் ராணுவ தொழில் நிமித்தம் சென்றவர்களை உடனடியாக மீட்டுத் தருமாறு குடும்பத்தினர் கோரிக்கை முன் வைத்துள்ளனர்
இர்ஷாத் ரஹ்மதுல்லா
UPDATED: May 15, 2024, 5:48:08 AM
Sri lanka News
இலங்கை ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை ரஷ்யாவுக்கு அனுப்பியது தொடர்பில் இலங்கையில் பல்வேறு கருத்து முரண்பாடுகள் தோன்றி உள்ளன.
இலங்கை செய்திகள்
இந்த நிலையில் ரஷ்யாவுக்கு சென்ற ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் தங்களது உறவினர்களுடன் அல்லது குடும்பத்துடன் எவ்வித தொடர்புகளையும் ஏற்படுத்தாத நிலை சந்தேகத்தை தோற்றுவித்துள்ளதாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு ராணுவ பணிக்கான அனுப்பப்பட்ட இலங்கையின் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் உறவினர்கள் முறைப்பாடு தெரிவிப்பதற்கு வருகை தந்திருந்ததை காண முடிந்தது.
Today Sri lanka News
இதே வேளை ரஷ்யாவில் இருக்கின்ற உறவினர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு அங்கவீன முற்றிருப்பதாகவும் தங்களுக்கு பேசப்பட்ட சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளதாக ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவித்தனர்.
இவ்வாறு அனுப்பப்பட்டவர்களை இலங்கைக்கு அழைத்து தருமாறு வேண்டிய ரஷ்ய தூதுவர் ஆலயத்திற்கு இன்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ALSO READ | நல்லிணக்க ஜனாதிபதி செயலியின் விஷேட கலந்துரையாடல்
Latest Sri Lanka News
இந்த நிலையில் இவர்கள் இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகர் ஆலயத்திற்கும் முறைப்பாடு தெரிவித்ததுடன்,சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரிடமும் தங்களது முறைப்பாடுகளை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது