• முகப்பு
  • இலங்கை
  • ரணில்-சஜித் கூட்டு ஒருபோதும் ஏற்படாது'' - திஸ்ஸ அத்தநாயக்க

ரணில்-சஜித் கூட்டு ஒருபோதும் ஏற்படாது'' - திஸ்ஸ அத்தநாயக்க

இர்ஷாத் ரஹ்மதுல்லா

UPDATED: Apr 30, 2024, 2:59:42 AM

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஒன்றாக வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அனுர குமார திஸாநாயக்க ஸ்வீடனில் தெரிவித்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்  திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார் இந்த ரணில் சஜித் கூட்டு நடக்கவே நடக்காது.

நேற்று கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜே.பி.யின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க இதனை தெ ரிவித்தார்.

 மேலும் கருத்துத் தெரிவித்த எஸ்.ஜே.பியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.திஸ்ஸ அத்தநாயக்க,

சமகி ஜன சனந்தன மற்றும் சமகி ஜன பலவேகய இணைந்து நடத்தும் மே தினத்தை இரண்டு இடங்களில் நடத்த எதிர்பார்த்துள்ளோம்.

பிரதான மே தினக் கூட்டத்தை கொழும்பு சாத்தம் வீதியில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சமகி ஜன பலவேக மே தின அணிவகுப்பு குணசிங்கபுர மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. சமகி ஜ பலவேகவின் மே தினப் பேரணியில் 100,000க்கும் அதிகமான மக்கள் பங்கேற்பார்கள் என்று நம்புகிறோம்.

 சமகி ஜனபலவேக, அறிஞர் அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் செயற்பாட்டாளர்கள் இதற்காக இணைந்து கொள்ள உள்ளனர். என்றும் அவர் கூறினார் 

  • 1

VIDEOS

Recommended