• முகப்பு
  • இலங்கை
  • பண்முக ஆளுமை கொண்ட அதிபர் றஸ்ஸாக் 40 வருட அரச பணியிலிருந்து ஓய்வு பெறுகின்றார்

பண்முக ஆளுமை கொண்ட அதிபர் றஸ்ஸாக் 40 வருட அரச பணியிலிருந்து ஓய்வு பெறுகின்றார்

கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்

UPDATED: Sep 12, 2024, 8:24:41 AM

                                                                                                                                                                                                                           கற்பிட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும்  கொண்டவரும் திகழி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபருமான எம்.ஐ.எம்.ஏ றஸ்ஸாக்  தனது 40 வருடகால அரச பாடசாலை ஆசிரியர் மற்றும் அதிபர் பணியில் இருந்து இன்று வியாழக்கிழமை (12) முதல் ஓய்வு பெறுகின்றார். இவருக்கான பிரியாவிடை நிகழ்வும் இன்றைய தினம் பாடசாலையில் இடம்பெறுவதும் சிறப்பம்சமாகும்.

அதிபர் றஸ்ஸாக் கற்பிட்டி அல் அக்ஸா தேசியப் பாடசாலையில் தரம் 1 முதல் உயர்தரம் வரை கல்வி கற்று கலைப் பிரிவில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவானார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்து 1990 ஆம் ஆண்டு பட்டதாரியாக வௌியேரினார்.

அத்துடன் இலங்கை திறந்த பல்லைக்கழகத்தில் பட்டமேற் கல்வி டிப்ளோமா (PGDE) மற்றும் ஆசிரியர் கல்வி முதுமாணி பட்டத்தையும் (MATE) நிறைவு செய்தார். இவர் 1984.12.27 ஆம் திகதி ஆசிரியர் நியமனம் கிடைக்கப் பெற்று கற்பிட்டி கண்டல்குழி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில்  தனது முதல் அரச பணியில் காலடி வைத்தார். 

அதன்பின் தனது சொந்த ஊர் மற்றும் கற்ற பாடசலைக்கு சேவையாற்ற இடமாற்றம் பெற்று 1991.01.01 முதல் கற்பிட்டி அல் அக்ஸா தேசியப் பாடசலையில் இணைந்து கொண்டார்.

அதன் பின் 1993.09.15 ம் திகதி முதல் கற்பிட்டி பள்ளிவாசல்துறை முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு ஆசிரியராக இடமாற்றம் பெற்று சென்ற இக்காலப்பகுதியிலேயே அவருக்கு திருப்பு முனையாக mமைந்த தருனம்.

 இலங்கை அதிபர் சேவை தரம் 2 க்கு 2000.08.04 அன்று நியமனம் பெற்றார்.  கற்பிட்டி பள்ளிவாசல்துறை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபராக தனது பணியை திறம்பட 2003 வரை செய்து மீண்டும்  2003.01.02 ம் திகதி  கற்பிட்டி கண்டல்குழி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதிபராக தனது கடமையை 2018.05.04 வரை தொடர்ந்தார்.

இக்காலப்பகுதியில் இலங்கை அதிபர் சேவை தரம் 1 க்கு பதவியுயர்வு பெற்றமை குறிப்பிடத்தக்கது. கற்பிட்டி கண்டல்குழி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இருந்து இடமாற்றம்பெற்று 2018.05.05 முதல் கற்பிட்டி திகழி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதிபாராக கடமையை பொறுப்பேற்றார்.

இவர் அதிபராக கடமையாற்றிய இக்காலப்பதியிலே திகதி முஸ்லிம் மகா வித்தியாலயம் பல்வேறு வளர்ச்சியையும் கல்வி முன்னேற்றத்தையும் அடைந்ததுள்ளது என்பதுடன் உயர்தர விஞ்ஞான பிரிவில் சிறந்த பெறுபேறு பெற்றதுடன் ஒருவர் மருத்துவத் துறைக்கு தெரிவு செய்யப்பட்டமை சாதனையாகக் குறிப்பிடலாம்.  அத்துடன் கலை மற்றும் வணிகப்பிரிகளில் சிறந்தபெறுபேறு மற்றும் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் பல்லைக்கழக அனுமதியைப்  பெற்றுள்ளனர்.                       

அத்துடன் இப்பாடசாலை சகல துறைகளிலும் இப்பிரதேசத்தில் முன்னனியில் திகழ்கின்றமைக்கு இவரது தலைமைத்துவம் , வழிநடத்தல் சான்று பகர்கின்றது.பாடசலையின் உட்கட்டமைப்பில் அதிக கவணம் செலுத்தி மாணவர்களுக்கு சிறந்த வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதில் வெற்றி கண்டுள்ளார்.

மென்மையான சுபாவம் கொண்ட அதிபர் றஸ்ஸாக் பிரச்சனைகளை சுமூகமாகக் கையாண்டு சிறந்த ஒரு நிர்வாகத்தை மேற்கொண்டு இப்பாடசாலையை முன்னனி பாடசாலைகளில் ஒன்றாக மிளிரச் செய்த ஒரு பண்முக ஆளுமை, கொண்ட 40 வருட அனுபவம் அதிபர் றஸ்ஸாக் இன் ஓய்வு  கற்பிட்டி திகழி பாடசாலை சமூகத்தின் பேரிழப்பாகும். என கற்பிட்டி திகழி முஸ்லிம் மகா வித்தியாலய நிர்வாகம் தெரிவிக்கின்றது.

 

VIDEOS

Recommended