நீதியானதும், நேர்மையானதுமான தேர்தல் ஒன்று நடத்தப்பட வேண்டும
ஜே.எம்.ஹாபீஸ்
UPDATED: Aug 25, 2024, 3:01:41 AM
கண்டி பொதுமக்கள் சபை என்ற அமைப்பு, நீதியானதும், நேர்மையானதுமான தேர்தல் ஒன்று நடத்தப்பட வேண்டும் என்பதற்கான பிரசார வேலைகளை கண்டி நகரில் ஆரம்பித்தது.
மேற்படி அமைப்பினர் பல்வேறு கட்டங்களில் நேர்மையான தேர்தல் ஒன்றை நடத்து வதற்கு அரசையும் பொதுமக்களையும் விழிப்படையச் செய்யும் பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டுள்ளன.
அதில் முதலாவது வேலைத்திட்டமாக வாகனங்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளில் ஸ்டிக்கர்களை ஒட்டி பிரசாரம் செய்யும் ஒரு நடவடிக்கையை மேற்கொண்டனர்.
கண்டி மத்திய சந்தை முன் இவ்வேலைத்திட்டம் முதற்கட்மாக மேற்கொள்ளப்பட்டது. கண்டி மத்திய சந்தை முன் நிறுததப்பட்டுள்ள முச்சக்கர வண்டிகளுக்கு அண்மையில் சென்று சாரதிகளிடம் அமைதியானதும், நேர்மையானதுமான தேர்தல் ஒன்று நடத்தப்படுவதன் முக்கியத் துவத்தை எடுத்துக் கூறி அது தெடர்பாக தயாரிக்கப்பட்டுள்ள ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஒட்டினர்.
மேற்படி வேலைத்திட்டத்திற்கு கண்டி சர்வமத அமைப்பின் ஏற்பாட்டளர் காமினி ஜயவீர, தொழிற்சங்கப்பிரமுகர் திருமதி ரேனுகா மல்லியகொட, ஆசிரியர் தொழிற்சங்க வாதியான திருமதி காஞ்சனா நடராஜா, முன்னாள் பாராளுமன்ற அங்கத்தவர் சட்டத்தரணி ஹரேந்திரநாத் துனுவில, சட்டத்தரணி கிருசாற்த எல்பிட்டிய உற்பட பலர் கலந்து கொண்டனர்.