• முகப்பு
  • இலங்கை
  • இலங்கையில் எதிர்காலத்தில் சமாதானத்தை ஏற்படுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கும் தீர்மானம்

இலங்கையில் எதிர்காலத்தில் சமாதானத்தை ஏற்படுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கும் தீர்மானம்

ஏ.எஸ்.எம்.ஜாவித்

UPDATED: May 19, 2024, 2:40:14 PM

இலங்கையில் மீண்டும் சமாதானத்தை ஏற்படுத்தும் கூட்டமைப்பு(RPSL) இன் இரண்டாவது வருடாந்த பொதுக்கூட்டம் நேற்று தெஹிவளை -கல்கிஸ்ஸை பெர்ஜயா ஹோட்டலில் இன்று (19)நடைபெற்றது.

original/img-20240519-wa0074
கூட்டமைப்பின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச் செயலாளர் டொக்டர் ஸாமிலா தாவூத், பொருளாளர் எம்.எம்.என்.முனவ்வரா, பிரதித் தலைவர்களான பேராசிரியர் எம்.எஸ்.எம்.அஸ்லம், வஸீர் முக்தார், சாயிப் ஹனீபா ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

அகில இலங்கை ரீதியாலான அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.

original/img-20240519-wa0051
புதிய ஆண்டுக்கான அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன் இலங்கையில் எதிர்காலத்தில் சமாதானத்தை ஏற்படுவதற்கான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது.


கூட்டமைப்பின் கடந்த வருட செயற்பாடுகள் குறித்த அறிக்கையை பொதுச் செயலாளர் டொக்டர் ஸாமிலா தாவூத் சமர்ப்பித்தார்.இக்கூட்டமைப்பில் அங்கத்தவர்களான பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் ஒமர் காமில் முன்னாள் அமைச்சர் பேரியல் அஸ்ரப் ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.

VIDEOS

Recommended