• முகப்பு
  • புதுச்சேரி
  • தமிழகத்தில் பிரதமர் மோடி 15 நாட்கள் சுற்றி வந்தாலும் பாஜக ஒரு இடத்தில் கூட டெபாசிட் வாங்க முடியாது - உதயநிதி ஸ்டாலின்.

தமிழகத்தில் பிரதமர் மோடி 15 நாட்கள் சுற்றி வந்தாலும் பாஜக ஒரு இடத்தில் கூட டெபாசிட் வாங்க முடியாது - உதயநிதி ஸ்டாலின்.

சக்திவேல்

UPDATED: Apr 1, 2024, 11:11:38 AM

மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் காங் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் புதுச்சேரியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

முதலில் வில்லியனூர் கிழக்கு மாட வீதி சந்திப்பில் பேச துவங்கினார்.

அப்போது அவர், அடுத்த 17 நாட்களுக்கு இதே உற்சாகத்தோடு வாக்கு சேகரிக்கவும்..கடந்த முறை 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் காங் வைத்திலிங்கம் வெற்றி பெற்றார்.

Also Read : மயிலாடுதுறையில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற அதிமுக தேர்தல் பிரச்சார பொதுகூட்டத்தில் செய்தியாளருக்கு இருக்கைகள் வழங்காத அவலம்.

இந்த முறை 3 லட்சம் வித்தியாசத்தில் பெற செய்யவும்.வைத்திலிங்கத்திற்கு போடும் ஓட்டு கை சின்னத்திற்கு போடும் ஓட்டு மோடிக்கு வைக்கும் வேட்டு என்றார்.

தமிழகத்தின் சாதனைகளை பட்டியலிட்ட உதயநிதி,தமிழகத்தில் பெண்களுக்கான இலவச Pink பேருந்துகளுக்கு நல்ல வரவேற்பு..அதனை தமிழக முதல்வர் பஸ் என தான் பெண்கள் அழைப்பதாக தெரிவித்தார்.

தமிழகத்தின் நல்ல திட்டங்கள் புதுச்சேரிக்கு வர வேண்டும் எற்றால் இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்யுங்கள் என்றும்ஏழரை லட்சம் கோடி ரூபாய் ஊழலை மத்திய அரசு செய்துள்ளதாக CAG அறிக்கை தெரிவிக்கிறது..காங் வேட்பாளர் வைத்திலிங்கத்தை வெற்றி பெற செய்யுங்கள்.

இவர்களை தட்டி கேட்க இந்தியா கூட்டணி வெற்றி பெற செய்ய வேண்டும்.தமிழகத்தில் 39 இடங்களிலும் புதுச்சேரியில் ஒரு தொகுதியிலும் என 40 இடங்களில் வெற்றி பெற்று பிரதமரை முடிவு செய்ய வேண்டும் என்றும் உதயநிதி பேசினார்.

Also Read : கச்சத்தீவு விவகாரத்தில் புதிய விவரங்கள் திமுகவின் இரட்டை வேடத்தை முற்றிலுமாக அவிழ்த்துவிட்டதாக பிரதமர் மோடி கூறினார்.

பிரச்சாரத்தில் கூடியிருந்த மக்கள்,

"செங்கல் எங்கே ...?" 

"செங்கல் எங்கே..?" எனக்கேட்டனர்.

இதற்கு உதயநிதி, இந்த விவகாரம் புதுச்சேரிக்கு வந்து விட்டதாக கூறி செங்கலை எடுத்து காட்டினார்.

அனைவரும் கைத்தட்டி வரவேற்றனர். 

AIMS கட்டும் வரை கொடுக்க மாட்டேன்..

அவர்கள் தேடி கொண்டு இருக்கிறார்கள்.

கல்லுக்கு அவ்வளவு டிமான்டா...?

நீங்கள் கேட்டதால் காட்டினேன் என்றார்.

நானாவது செங்கல் காட்டினேன்..

ஆனா எடப்பாடியார் என்ன செய்வார் என கூறி பிரதமரை பார்த்து சிரிக்கும் புகைப்படத்தை காட்டி பல்லை காட்டுவார்..காலில் விழுவார்..தவழ்ந்து தவழ்ந்து செல்வார் என உதயநிதி விமர்சித்தார்.

தொடர்ந்து முதலியார்பேட்டை- மரப்பாலம் சந்திப்பில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், கடந்த முறை 3.5 லட்ச ஓட்டு வித்தியாசங்கள் தமிழிசை தோற்றார்.

பிஜேபியில் ஒரு சவுரியம் தோற்றுவிட்டால் உடனடியாக கவர்னராக்கி விடுவார்கள். மீண்டும் அக்கா தமிழிசையை ஆடாக ரெடியாகி விட்டார்.. ஆடு தானாக சென்று மாட்டி கொண்டுள்ளது போல இப்போது தமிழிசை தென்சென்னையில் சிக்கி இருக்கிறார் என்றார்.

அடுத்து இறுதியாக அண்ணா சாலையில் அவர் பேசுவதற்கு முன் காங்கிரஸ் கொடியை உயர்த்தி பிடித்து அசைத்து வாக்கு சேகரித்தார். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் புதுச்சேரியில் போட்டியிடும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் கொடியை உயர்த்தி தூக்கிபிடித்து அசத்தபடி காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு சேகரித்தார். 

Also Read : மயிலாடுதுறையில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற அதிமுக பொதுகூட்டத்தில் மது போதையில் நின்ற அதிமுக தொண்டருக்கு சால்வை அணிவித்த மாவட்ட செயலாளர்.

தொடர்ந்து பேசிய உதயநிதி,

புயல்- மழைக்கு வராத பிரதமர் தற்பொழுது தமிழகத்தை சுத்தி சுத்தி வருகிறார்..

நான் சவால் விடுகிறேன்.. அடுத்த 15 நாட்கள் சுத்தினாலும் பாஜக தமிழகத்தில் வெற்றி பெறாது என்றார்.

புதுச்சேரியின் பாதம் தாங்கி பழனிசாமியாகி விடாதீர்கள்..பாஜகவின் அடிமையாகி விட்டாதீர்கள்..நீங்களும் தூக்கி எறியப்படுவீர்கள் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு வேண்டுகோள் விடுத்தார்.

  • 6

VIDEOS

Recommended