விஜய்-யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அங்கீகாரம்.

JK

UPDATED: Sep 8, 2024, 1:03:56 PM

நடிகர் விஜய்

கட்சி ஆரம்பித்து அதன் பெயரை தெரிவித்து அதன் பின்னர் கட்சிக்கான கொடியை வெளியிட்டார் அது தொடர்ந்து சர்ச்சை ஏற்படுத்திக் கொண்டே இருந்தது. 

குடி தொடர்பான சச்சை ஒவ்வொரு நாளும் பேசும் பொருளாக இருந்தது இதனை தொடர்ந்து முதல் மாநாடு கள்ளக்குறிச்சி நடைபெறும் விழுப்புரத்தில் நடைபெறும் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடங்களை அறிவித்து வந்த வண்ணம் இருந்தனர்.

இந்நிலையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிவார் என நேற்று முதல் தகவல் வெளியாகி பரபரப்பாக காணப்பட்டது.

தமிழக வெற்றி கழகம்.

என்ன அறிவிப்பு என தமிழக வெற்றி கழக தொண்டர்கள் எதிர்பார்ப்பிலும், ஆர்வத்தோடு இருந்த நிலையில் தேர்தல் ஆணையம் தமிழக வெற்றிக் கழக கட்சியை அங்கீகரித்து உள்ளது என்ற அறிவிப்பை இன்று விஜய் வெளியிட்டார்.

இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

Breaking News in Tamil 

இதன் ஒரு பகுதியாக திருச்சி மத்திய மாவட்டம் சார்பாக சீனிவாசன் தலைமையில் திருச்சி காந்தி மார்கெட் ஆர்ச் பகுதி அருகே பட்டாசு வெடித்தும், சாலையில் செல்லும் பொதுமக்களுக்கும், பேருந்தில் செல்லும் பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கியும் திருச்சி தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் கொண்டாடினர்

அப்போது அனைவரும் தமிழக வெற்றிக் கழகம் வாழ்க என கோஷமிட்டவாறு கொடியை ஏந்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

 

VIDEOS

RELATED NEWS

Recommended