தமிழரசுக்கட்சியின் மத்திய குழு ஆரம்பம்

வவுனியா

UPDATED: Sep 1, 2024, 9:26:40 AM

தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்கு தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று காலை 11மணியளவில் ஆரம்பமாகியது.  

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன்,த.கலையரசன்,எஸ்.குகதாசன்,எம்.எ.சுமந்திரன், சட்டத்தரணி கே.வி. தவராசா, கே.சிவஞானம்,செயலாளர் ப.சத்தியலிங்கம், உட்பட மத்திய குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். 

original/img-20240901-wa0067
இதேவேளை இன்றையகூட்டம் 11மணிக்கு ஆரம்பமாகிய நிலையில் கட்சியின்தலைவர் மாவைசேனாதிராஜா வருகைதரவில்லை. 

இன்றைய கூட்டத்தில் தமிழ் பொது வேட்பாளர் விடயம் தொடர்பாக முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

VIDEOS

RELATED NEWS

Recommended