• முகப்பு
  • அரசியல்
  • இரத்தினபுரி மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவத்திற்காக நேசித்த இ.தொ.கா விலிருந்து விடை கொடுக்கும் - ரூபன் பெருமாள்

இரத்தினபுரி மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவத்திற்காக நேசித்த இ.தொ.கா விலிருந்து விடை கொடுக்கும் - ரூபன் பெருமாள்

இர்ஷாத் றஹ்மத்துல்லா

UPDATED: Oct 9, 2024, 12:10:33 PM

பெரும்பான்மை மக்களுக்கு மத்தியில் வாழும் எமது இரத்தினபுரி மாவட்ட தமிழ் மக்களுக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் என்பது காலத்தின் கட்டாயத் தேவையாக அமைந்திருக்கும் இத்தருணத்தில், தமிழர்கள் ஓரணியில் ஒன்று திரண்டால் வாக்களிக்க தயாராக இருக்கும் இரத்தினபுரி மாவட்ட தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து,  தான் நேசித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொறுப்புகளுக்கு மிகவும் மனவுறுக்கத்துடன் விடை பெறுவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் உப செயலாளரும், இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளருமாகிய ரூபன் பெருமாள் அவர்கள் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத் தேர்தல்கள் நடைபெறும் ஒவ்வொரு காலக் கட்டத்திலும் இரத்தினபுரி மாவட்ட தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டு வரும் சோகமான செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்திருக்கிறது. எனினும், இம்முறை அந்த நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்  பாராளுமன்றம் கலைக்கப்பட்டவுடன்  இங்கு வாழும் அரசியல் தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள், புத்திஜீவிகள், வர்த்தகர்கள் மற்றும் இளம் சமுதாயத்தினர் அனைவரையும் ஒன்றிணைத்து ஓரணியில் சென்றால் மாத்திரமே தமிழ் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய முடியுமான சூழ்நிலை காணப்படும் சந்தர்ப்பத்தில் பெரும்பாண்மை கட்சியுடன் இணைந்து போட்டியிட முடிவு செய்வ ததானது, எமது இரத்தினபுரி மாவட்ட தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாது எடுத்த முடிவாக அமைந்துள்ளமையால், மாவட்ட மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்ள தான் நேசித்த கட்சியிலிருந்து விடைப் பெற்று, தமிழ் பிரதிநிதித்துவத்தை நிலைநாட்ட முடிவு செய்துள்ளதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த காலங்களில்  இம்மாவட்ட மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு வழங்கிய முன்னாள் அமைச்சர் கௌரவ ஜீவன் தொண்டமான் அவர்களுக்கும், கட்சியின் தவிசாளர் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் அவர்கள் மற்றும் செந்தில் முத்துவிநாயகம் உள்ளிட்ட உடன்பிறவா சகோதரர்களாக அன்பு காட்டி ஆதரவு வழங்கிய கட்சியின் முக்கியஸ்தர்கள் அனைவருக்கும் கண்ணீருடன் விடை கொடுப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த முடிவை எடுப்பதற்கு காரணமாக அமைந்த "இரத்தினபுரி மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவம்" என்பதன் முக்கியத்துவத்தை கட்சியின் இம்மாவட்ட அங்கத்தவர்கள் ஆதரவாளர்கள் மற்றும் நெருங்கி பழகிய அனைவரும் புரிந்துக் கொண்டு ஆதரவளிப்பார்கள் என தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும், ஒவ்வொரு பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் போதும் கவலை அடைந்த இரத்தினபுரி மாவட்ட தமிழ் மக்கள் இம்முறை, எமக்கு வழங்கும் ஆதரவிற்கு தனது உயிரை பணயம் வைத்தாவது, மாவட்ட மக்களுக்கான குரலாய் பாராளுமன்றத்தில் ஒலிக்கச் செய்ய முடியுமாக அமையும் எனவும் ரூபன் பெருமாள் அவர்கள் மேலும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

 

VIDEOS

Recommended