• முகப்பு
  • அரசியல்
  • தமிழரசுக்கட்சியின் தீர்மானத்தை நான் எதிர்க்கிறேன் கூட்டத்தின் பின் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் தெரிவிப்பு

தமிழரசுக்கட்சியின் தீர்மானத்தை நான் எதிர்க்கிறேன் கூட்டத்தின் பின் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் தெரிவிப்பு

வவுனியா

UPDATED: Sep 16, 2024, 9:39:57 AM

தமிழரசுக்கட்சியின் தீர்மானத்தை நான் எதிர்க்கிறேன் என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் 6 பேர் கொண்ட உயர்த்துவதன் உறுப்பினருமான சி. சிறிதரன் தெரிவித்தார்.வவுனியாவில் உள்ள கட்சி அலுவலகமான தாயகத்தில் 6 பேர் கொண்ட குழு கூறியதன் பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 தொடரந்தும் கருத்து தெரிவித்த அவர்,இன்றைய கூட்டத்தில் ஐந்து பேர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலைப்பாட்டில் இருந்தார்கள்.அது தொடர்பாக ஒரு அறிக்கையும் எழுதப்பட்டிருந்தது. அந்த அறிக்கையில் ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி  சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிப்பதாகவே இருந்தது.

 original/img-20240902-wa0045
மத்திய குழுவில் கடந்த முதலாம் தேதி எடுக்கப்பட்ட தீர்மானம் பிழை என நான் எழுத்து மூலமாகவும் வழங்கி இருக்கிறேன். நான் ஒரு தெரிவு செய்யப்பட்ட தலைவர் என்ற ரீதியில் எழுத்து மூலமாக அறிவித்து விட்டு தான் பிரித்தானியா சென்று இருந்தேன். 6 திகதி நான் மீளவும் இலங்கைக்கு திரும்புவேன். ஏழாம் திகதி வரை கூட்டத்தினை வைக்க வேண்டாம் என கூறியிருந்தேன்.

 

அவ்வாறு கூட்டங்கள் வைத்தாலும் தீர்மானங்கள் எடுக்கப்படாது என்று பொதுச்செயலாளர் சத்தியலிங்கம் எனக்கு உறுதிமொழியையும் தந்திருந்தார்.தற்போதைய தலைவராக இருக்கின்ற மாவை சேனாதிராஜாவை 26 ஆம் தேதி சந்தித்து பேசுகின்ற போது நாங்கள் தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றமாட்டோம் சில விடயங்கள் தொடர்பாக பேச இருக்கிறோம் என தெரிவித்திருந்தார்.

 இவற்றையெல்லாம் தாண்டி 2024. 8. 18ஆம் திகதி ஆறு பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டு அந்தக் குழு கூடி தீர்மானம் எடுக்காத நிலையில் மத்திய குழுவில் அவசர அவசரமாக யாருடைய தேவைக்காக யாருடைய தீர்மானத்தை எடுத்தார்கள்.  சஜித் பிரேமதாசவுக்காக அந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

 

அந்த தீர்மானம் எடுத்த பின்னர் நான் கடிதம் மூலமாகவும் தெரிவித்திருந்தேன், இது கூர்ணர்வற்ற ஒரு முடிவு இதனை நான் எதிர்க்கிறேன், என்னைப் பொருத்தவரை நான் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக இந்த மக்களின் திரட்சிக்காக தமிழர்களுடைய தேசிய திரட்சியை கொண்டு வருவதற்கும் தமிழ் மக்களுடைய தேசிய உணர்வுகளை பிரதிபலிக்க கூடிய வகையிலும் நாங்கள் ஒரு பொது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும். பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்கின்ற ஒரு தெளிவான நிலைப்பாட்டை கொண்டு இருந்தேன். அதனை இப்போதும் கொண்டிருக்கிறேன். இன்றும் இந்தக் கூட்டத்தில் அதனை வலியுறுத்தி என்னுடைய கருத்து இவர்களுடைய தீர்மானத்திற்கு எதிரானது என்பதனை பதிவு செய்யுமாறு தெரிவித்து இருக்கிறேன்.

  ஸ்ரீதரன் இதனை ஏற்கவில்லை அதாவது ஸ்ரீதரன் சஜித் பிரேமதாசாவுக்கு மட்டுமல்ல ரணில் விக்கிரமசிங்க, அனுரகுமார திசாநாயக்க உட்பட்ட தென்னிலங்கையினுடைய வேட்பாளர்கள் யாருக்கும் ஆதரவு இல்லை என்பதை பதிவு செய்யுமாறு குறிப்பிட்டு அந்த கூட்டத்திலிருந்து என்னுடைய நேரம் முடிந்ததும் புறப்பட்டேன் என தெரிவித்தார்.

 

VIDEOS

RELATED NEWS

Recommended